வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும்போது, மோசமான ஓட்டுநர் பழக்கம், சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரிக்கின்றன. இது வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்க வழிவகுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களை வாங்கவே விருப்பப்படுகின்றனர். பொதுவாக சில பாதுகாப்பு அம்சங்கள் நமக்கு பெரிதாக உதவியாக இருக்கும், சில வசதிகள் பெரியளவில் பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் சில பாதுகாப்பு வசதிகள் கூடுதல் தேர்வுகளாகவே வழங்கப்படுகின்றன. பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பெரியளவில் பயன்தராத பாதுகாப்பு அம்சங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கார்களில் உள்ள மிகுந்த பயந்தரக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள்
அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (ACC)
க்ரூஸ் கண்ட்ரோலின் அடுத்த நிலை வெர்சனாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் பார்க்கப்படுகிறது. இது முன்புறத்தில் செல்லும் வாகனத்தின் வேகத்தை உணர்ந்து தனது வாகனத்தின் வேகத்தை சரிசெய்யும்.
பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி (LDW)
இந்த பாதுகாப்பு வசதியானது வாகனத்தை ஒரே பாதையில் தொடர்ந்து இயங்க அறிவுறுத்தும் மற்றும் தொடர்ந்து வாகனம் பாதை மாறிக்கொண்டே இருந்தால் ஓட்டுனரை எச்சரிக்கும். இது கார்களை பொறுத்து தானாக காரை இயக்கும் விதத்திலும் வழங்கப்படுகிறது. இந்த வசதி விபத்துகளை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல்களையும் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
இரவு பார்வை
இது தெர்மோகிராஃபிக் கேமிரா மற்றும் லிடர் மூலமாக இரவு நேரங்களிலும் மோசமான வானிலையின்போதும் எதிரே செல்லும் வாகனங்களை ஓட்டுனர் எளிதாக அடையாளம் காண உதவியாக உள்ளது. இந்த வசதி ப்ரீமியம் கார்களிலேயே கூடுதல் தேர்வாகதான் வழங்கப்படுகிறது. பட்ஜெட் கார்களில் இந்த வசதி வழங்கப்படுவதில்லை.
குருட்டு பகுதியை கண்டறிதல் (BSD)
ஓட்டுனரால் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் மூலமாகவும் வாகனத்தை சுற்றி நெருக்கமாக உள்ள சில பகுதிகளை பார்க்க முடியாது. இந்த குறையை களையவே இந்த பாதுகாப்பு வசதி பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளில் முக்கியமானதாக விளங்கும் இந்த வசதி குருட்டு பகுதியில் ஏதாவது வாகனமோ அல்லது பொருளோ வந்தாலோ அல்லது இருந்தாலோ அதனை ஓட்டுனரிடம் எச்சரிக்கும்.
ஓட்டுனரை கண்காணிக்கும் வசதி
பெயரை படிக்கும்போதே தெரிந்திருக்கும் இது முழுக்க முழுக்க வாகனத்தை இயக்கும் ஓட்டுனரை தான் கண்காணிக்கும் என்று. ஒற்றை கேமிரா உதவியுடன் செயல்படும் இந்த பாதுகாப்பு வசதி ஆனது ஓட்டுனரின் முகத்தை தொடர்ந்து கண்காணிப்பதால் தூக்கம் போன்ற விபத்து ஏற்படுத்தக்கூடிய காரணிகளை உடனே கண்டறிந்து எச்சரிக்கும்.
சாலை அடையாளம் அல்லது பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர் கண்டறிதல்
இந்த பாதுகாப்பு வசதி கொண்ட வாகனங்கள் கிட்டத்தட்ட அரை தன்னாட்சி ஆகின்றன. பல்வேறு போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விளக்குகள் மற்றும் பிற பொருள்கள் மற்றும் சாலையில் உள்ள பாதசாரிகளை அடையாளம் காண உதவும் இந்த வசதி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பல்வேறு போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிவதையும் உறுதி செய்யும்.
பெரியளவில் பயன்தராத பாதுகாப்பு வசதிகள்
இந்த பிரிவில் நாம் பார்க்க போகும் பாதுகாப்பு அம்சங்கள் பெரும்பான்மையாக அனைத்து கார்களிலும் உள்ளன. இவை எந்த விதத்திலும் நமக்கு உதவாதவை என்று நான் கூறவில்லை. இவை போதாதவையாக இருப்பதால் தான் மேற்கூறப்பட்டுள்ள வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு உணர்வு
இந்த பாதுகாப்பு வசதியினால் பெரியளவில் பயனில்லை. அதாவது இந்த வசதி பின் இருக்கை வரிசையில் யாராவது அமர்ந்திருந்தால் ஓட்டுனருக்கு தெரிவிப்பதை மட்டுமே செய்கிறது. இதற்கு அப்கிரேட்டாக சென்சார் வசதிகள் ஏகப்பட்டவை லக்சரி கார்களில் வர ஆரம்பித்துவிட்டன.
காற்றுப்பை
இது ஒரு ஸ்வீடிஷ் கார் தயாரிப்பாளரால் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகும். மோதல் தாக்கத்தை உணர வாகனத்தின் குறுக்கே சென்சார்கள் வைக்கப்பட்டு, பயணிகளைப் பாதுகாக்க கார்களுக்குள் ஏர்பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வசதி விரிவடைந்து தற்போது பாதசாரிகளுக்கும் ஏர்பேக்குகள் என்ற அளவில் வந்துள்ளது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த வசதியினால் சில சமயங்களில் அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அதாவது தெரியாத்தனமாக காரை பெரிய பள்ளத்தில் இறக்கினால் உடனே காற்றுபை விரிவடைந்துவிடுகிறது.
இதனால் பள்ளத்தில் இறக்கியதால் விபத்து ஏற்படாவிடினும், காற்றுப்பை திடீரென விரிந்ததால் கார் விபத்தில் சிக்கிய சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் விரிந்த காற்றுப்பையை மீண்டும் உள்ளே அடைப்பது என்பது செலவு மிகுந்ததாக உள்ளது.
சீட் பெல்ட்
வாகன ஓட்டிகளுக்கு முதன்முதலில் கிடைத்த பாதுகாப்பு அம்சம் இதுதான் என்று சொல்ல வேண்டும். இந்த அமைப்பு முன் டாஷ்போர்டு அல்லது முன் இருக்கையில் (பின்புற இருக்கை பயணிகளுக்கு) பயனர்களின் முக பாதிப்புக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இருக்கை அமைப்பை பொறுத்து பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் ஏராளமான சீட் பெல்ட்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக