Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 டிசம்பர், 2020

முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எது? சிரிக்க... சிந்திக்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

------------------------------------------------------

விமல் : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

கமல் : இல்லடா.. பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.

விமல் : 😖😖

------------------------------------------------------

சோமு : நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

ராமு : அப்படியா! எங்க வேலை பாக்குறீங்க?

சோமு : கசாப்புக் கடையில!!

ராமு : 😳😳

------------------------------------------------------

மருத்துவர் : ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.

நோயாளி : அப்ப ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?

மருத்துவர் : 😬😬

------------------------------------------------------

சிறந்த வரிகள்...!!

------------------------------------------------------

மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே நாம் செலவு செய்வது தான் 'காலம்".

வாழும் காலத்தில் நீங்கள் ஏழையாக இருந்தாலும் மனதில் பணக்காரனாக இருங்கள். பணக்காரனாக ஆன பின்னும் நடத்தையில் ஏழையாக இருங்கள்.

கற்றுக்கொள்வதாக முடிவு எடுத்தால் முதலில் கவலைகளை மறக்க கற்றுக்கொள்ளுங்கள். 

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்லை. எதிர்பார்ப்பதெல்லாம் வாழ்க்கையில் கிடைப்பதுமில்லை.

நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஓடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை.

இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் நிம்மதியான வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

------------------------------------------------------

குறளும், பொருளும்...!!

------------------------------------------------------

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.

பொருள் :

மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைமாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக