குறிக்கோளை கொண்டு செயல்படும் எண்ணம் உடைய விருச்சிக ராசி அன்பர்களே..!!
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பல துறைகளை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையற்ற டென்ஷனையும், பதற்றத்தையும் குறைத்து கொள்வதன் மூலம் தலைவலி சார்ந்த இன்னல்கள் குறையும்.
திருமணம் :
திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். மனைவியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
மாணவர்கள் :
மாணவர்கள் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடப்பது நன்மையளிக்கும். படிக்கும் விதங்களில் புதுவிதமான மாற்றங்களையும், அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவி உயர்வுகளும் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
வியாபாரிகள் :
புதிய தொழில் சார்ந்த சிந்தனைகளும், முயற்சிகளும் ஈடேறும். வாகனப் பயணம் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவது நன்மையளிக்கும். எண்ணெய் சார்ந்த தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும்.
அரசியல்வாதிகள் :
அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். கட்சி சார்ந்த உயரதிகாரிகளிடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தொண்டர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்கள் :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்பட்டு மறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் உண்டாகும். தொழில் ரகசியங்களையும், நுட்பங்களையும் மற்றவர்களிடத்தில் பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
நன்மைகள் :
நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்ளக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களுக்கு நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.
கவனம் :
மனதில் தோன்றும் எண்ணங்களிலும், உயரதிகாரிகளிடத்திலும், வயதில் மூத்த குடும்பத்தினரிடமும் கவனத்துடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
வழிபாடு :
தினந்தோறும் அருகம்புல்லை கொண்டு விநாயகப் பெருமானை வணங்கி வர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக