---------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------
ஆசிரியர் : டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வெச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவ?
ராமு : அன்னைக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்.
ஆசிரியர் : 😛😛
---------------------------------------------------
காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.
காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க?
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
காதலி : 😆😆
---------------------------------------------------
அம்மா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணிய கீழே ஊத்துற?
மகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்-னு நீங்கதானம்மா சொல்வீங்க... அதான் கீழே ஊத்துறேன்...
அம்மா : 😉😉
---------------------------------------------------
டங்க் ஸ்லிப் ஆகுதா?
---------------------------------------------------
கரி படுக்க பரி மட்டம்... கனி பழுக்க கிளி கொத்தும்.
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்கு பழி.
மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை.
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
---------------------------------------------------
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கு கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து 'நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன்.
எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு" என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, 'கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள். அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி 'நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா" என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி, 'அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் வங்கி கணக்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை" என்றாள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக