Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 டிசம்பர், 2020

இந்தியர்களுக்காக ஸ்பெஷல் பதிப்பு ஆக்டிவா... குறிப்பிட்ட யூனிட் வரை மட்டுமே விற்க ஹோண்டா திட்டம்?...

 இந்தியர்களுக்காக ஸ்பெஷல் பதிப்பு ஆக்டிவாவை களமிறக்கிய ஹோண்டா... குறிப்பிட்ட யூனிட் வரை மட்டுமே கிடைக்கும்...

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் சிறப்பு பதிப்பு மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது எதற்காக என்பதை இப்பதிவில் காணலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஆக்டிவா ஸ்கூட்டரும் ஒன்று. இது இந்தியர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலிலும் இதுவே முதல் இடத்தில் இருக்கின்றது.

பல ஆண்டுகளைக் கடந்தும் இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல விற்பனையைப் பெற்று வருகின்றது. இந்த ஸ்கூட்டரை 2001ம் ஆண்டே ஹோண்டா நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆகையால், அடுத்த ஆண்டு 20ம் ஆண்டை இந்த ஸ்கூட்டர் தொடவிருக்கின்றது.

ஹோண்டா ஸ்கூட்டரின் வெற்றிகரமான இந்த இருபதாம் ஆண்டைக் கொண்டாடும் முயற்சியில் ஹோண்டா நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதனை முன்னிட்டு சிறப்பு பதிப்பு ஆக்டிவா ஸ்கூட்டரை ஒன்றை இந்தியாவில் விற்பனைச் செய்யவும் அது திட்டமிட்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் விளம்பர வீடியோவை அது வெளியிட்டுள்ளது.

20ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் ஸ்பெஷல் நிறம், அணிகலன் மற்றும் ஸ்டிக்கர்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அதாவது, இது 20ம் ஆண்டை முன்னிட்டு வரக்கூடிய ஸ்கூட்டர் என்பதைத் தோற்றுவிக்கும் பிரத்யேக ஸ்டிக்கர்களுடன் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த விளம்பரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு இருபதாம் திருமண தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை பரிசு வழங்குவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. புதிய ஸ்பெஷல் எடிசன் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் லோகோ முதல் பல்வேறு கூறுகள் தங்க நிறத்தைப் பெற்று ஜொலிக்கின்றன. இத்துடன், கருப்பு நிற அலாய் வீல், பழுப்பு நிற இருக்கை உள்ளிட்ட சிறப்பு நிற தேர்விலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இவற்றைத் தவிர வேறெந்த மாற்றங்களையும் ஹோண்டா இந்த ஸ்கூட்டரில் செய்யவில்லை.

ஆகையால், ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் வழக்கமான வேரியண்டில் என்ன எஞ்ஜின் தேர்வு வழங்கப்படுகின்றதோ, அதே தேர்வுதான் இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்திருக்கும் 20 ஆம் ஆண்டு ஸ்பெஷல் ஆக்டிவாவிலும் வழங்கப்பட இருக்கின்றது.

இதன் விலை விபரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஹோண்டா நிறுவனம் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போதும் விற்பனையில் இந்த ஸ்கூட்டரே டாப்பில் இருக்கின்றது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக