அசோக் லேலேண்ட் சவுதி அரேபிய சந்தைக்கான இரு புதிய பேருந்துகளை அறிமகும் செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தமிழகத்தின் தலைநகர் சென்னயை மையமாகக் கொண்டு இயங்கும் ஹிந்துஜா நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமான அசோக் லேலேண்ட் இரு புதுமுக பேருந்துகளை கடந்த புதன்கிழமை அன்று அறிமுகப்படுத்தியது. ஃபால்கன் சூப்பர் (Falcon Super) மற்றும் காஸ்ல் (Gazl) ஆகிய இரு பேருந்துகளையே அது அறிமுகம் செய்துள்ளது. இது சவுதி அரேபிய சந்தைக்கான சிறப்பு பேருந்துகளாகும்.
இதில் ஃபால்கன் சூப்பர் 70 இருக்கைகளையும், காஸ்ல் 26 இருக்கைகளைக் கொண்ட மாடலாகும். இவையிரண்டுமே சவுதி அரேபியர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட பிரத்யேகமாக பேருந்தாகும். அரபு நாட்டில் இருக்கும் ராஸ் ஏ1 கைமா (Ras Al Khaimah) உற்பத்தி ஆலையில் வைத்தே இப்பேருந்துகளை அசோக் லேலேண்ட் உருவாக்கியிருக்கின்றது.
இரண்டுமே அடிப்படையில் பேருந்துகளாக இருந்தாலும் வெவ்வேறு விதமாக பயன்படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, காஸ்ல் பேருந்து மருத்துவமனை மற்றும் சுற்றுலாவிற்கு பயன்படுத்துகின்ற நோக்கிலும், ஃபால்கன் மக்களின் பயண போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது.
தற்போது வரை சவுதியில் ஒட்டுமொத்தமாக 3,500 அசோக் லேலேண்ட் பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் புதிய பேருந்துகளை ஹிந்துஜா குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சவுதி நிறுவனமான வெஸ்டர்ன் ஆட்டோ ஆஃப் ஏ1 குரைர் (Western Auto of Al Ghurair) குழுமத்துடன் இணைந்தே அசோக் லேலேண்ட் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு பேருந்துகளின் அறிமுகம்குறித்து அரேபியாவிற்கான அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிதின் சேத் கூறியதாவது, "வளைகுடா கவுன்சிலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இரு புதிய பேருந்துகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பம், பாதுகாப்பு, வசதி என அனைத்திலும் இப்பேருந்துகள் திறன்மிக்காத இருக்கும்" என்றார்.
அசோக் லேலேண்ட் நிறுவனம் ஃபால்கன் சூப்பர் பேருந்தில் இன்லைன் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. உலகிலேயே இத்தகைய திறன் கொண்ட எஞ்ஜினைப் பெறும் முதல் பேருந்து இதுவே ஆகும். ஆகையால், இப்பேருந்து, யூரோ III மற்றும் யூரோ IV ஆகிய மாசு உமிழ்வுகளைக் கடைபிடிக்கும் நாடுகளில்கூட தடையின்றி பயன்படுத்த முடியும்.
இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளுடனேயே இப்பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தீ விபத்தை தவிர்க்கக்கூடிய உட்கட்டமைப்பு மற்றும் விபத்தின்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வசதி என பன்முக பாதுகாப்பு வசதிகளை இப்பேருந்துகள் பெற்றிருக்கின்றன.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக