Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 31 டிசம்பர், 2020

இதற்கு விடையை சொல்லிவிட்டால் நீங்கள் புத்திசாலிதான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!

---------------------------------------------------

ஒரு முறை ரமேஷ் தெருவில் வந்து கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் சுரேஷ் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.

 

ரமேஷ் : பையில் என்ன அண்ணே இருக்கிறது?

சுரேஷ் : வேறொன்றுமில்லை கோழிதான்..

ரமேஷ் : அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா?

சுரேஷ் : ஒன்னு என்ன... இந்த இரண்டையுமே நீ எடுத்துக்கோ.

ரமேஷ் : அஞ்சு கோழி, சரியா?..

சுரேஷ் : 😳😳

---------------------------------------------------

குறளும், பொருளும்...!

---------------------------------------------------

 

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

 

பொருள் :

 

தன் நெஞ்சம் நடுநிலை நீங்கி தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

---------------------------------------------------

புதிர் வினாக்கள்...!

---------------------------------------------------

1. உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை?

 

2. கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன?

1

11

21

1211

111221

312211

 

விடை கீழே...👇👇

---------------------------------------------------

டிப்ஸ்... டிப்ஸ்...!!

---------------------------------------------------

சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

 

சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டிய பின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.

 

இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் வரை மாவு கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

---------------------------------------------------

விடை :

---------------------------------------------------

 

 

1. விடை = 0.

 

ஏனெனில் பூச்சியத்தை எத்தனையால் பெருக்கினாலும் விடை பூச்சியமாகும்.

 

2. அடுத்து வரும் எண் 13112221.

 

எவ்வாறெனில் முதலில் 1, அடுத்து ஒரு ஒன்று (11), எனவே 1 ஒன்று

 

11 மேலே ஒரு ஒன்று (1-1)

 

21 மேலே இரண்டு ஒன்று (2-1)

 

1211 மேலே ஒரு இரண்டும், ஒரு ஒன்றும் (1-2-1-1)

 

111221 மேலே ஒரு ஒன்று, ஒரு இரண்டு, இரண்டு ஒன்று (1-1-1-2-2-1)

 

312211 எனவே அடுத்து ஒரு மூன்று, ஒரு ஒன்று, இரு இரண்டு, இரு ஒன்று (1-3-1-1-2-2-2-1)

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக