ஏர்டெல், வோடபோன் ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு அதிக போட்டி கொடுக்கும் ஜியோ நிறுவனம் தற்பொழுது அதன் பட்டியலில் போனஸ் டேட்டா வழங்கும் சிறப்பு திட்டங்களையும் அசத்தலான சலுகைளையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் தனித்துவமான டேட்டா நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
அண்மையில் ஜியோ நிறுவனம் அதன் தேர்ந்தெடுகப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் டேட்டா வவுச்சர்களுடன் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா போன்ற ஒடிடி நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோ நிறுவனம் தனது ஒரு சில திட்டங்களில் பயனர்களுக்கு போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது.
4ஜி டேட்டா நன்மை
அதேபோல் ஜியோ நிறுவனம் தனது ஒரு சில திட்டங்களில் பயனர்களுக்கு போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் இதுபற்றி சற்று விரிவாக தெரிந்துகொள்வோம். அதாவது போனஸ் டேட்டா என்பது தினசரி பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பை மீறி அணுக கிடைக்கும் அதிவேக 4ஜி டேட்டா நன்மை ஆகும். ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட போனஸ் டேட்டா நன்மையை மொத்தம் மூன்று திட்டங்களுடன் வழங்குகிறது. எந்தெந்த திட்டங்கள் என்று இப்போது பார்ப்போம்.
ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி எஃப்யூபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் 6ஜிபி அளவிலான போனஸ் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 90ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச சேவை
மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1,000 FUP நிமிடங்கள், அனைத்து ஜியோ ஆப்களுக்கும் இலவச அணுகல், ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச ழுவுவு சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.
ரூ.777 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.777 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இதுதவிர ரூ.777 ப்ரீபெய்ட் திட்டத்தில் 5ஜிபி போனஸ் டேட்டாவை பெறமுடியும்.
3000 எஃப்யூபி நிமிடங்கள்
மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல், வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள்,ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3000 எஃப்யூபி நிமிடங்கள், ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச சந்தா உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.
ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவை பெறமுடியும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி-365 நாட்கள் ஆகும். மேலும் ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டத்தில் 10ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவையும் பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 740ஜிபி அளிவான டேட்டா நன்மை கிடைக்கும்.
12,000 எஃப்யூபி நிமிடங்கள்
மேலும் இந்த திட்டதில் 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்இ வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 12,000 எஃப்யூபி நிமிடங்கள், ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச சந்தா உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக