Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 டிசம்பர், 2020

வட கொரியாவின் Kim Jong Un-க்கு blue jeans மீதுள்ள வெறுப்பின் காரணம் என்ன தெரியுமா?

 வட கொரியாவின் Kim Jong Un-க்கு blue jeans மீதுள்ள வெறுப்பின் காரணம் என்ன தெரியுமா?


கிம் ஜாங் தனது முழு நாட்டிலும் இணைய பயன்பாட்டை தடை செய்துள்ளார். இதன் காரணமாக வட கொரியாவின் மக்களால் பெரும்பாலும் வெளி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிவதில்லை.

உலகம் இதுவரை பல கொடூரமான மன்னர்களையும் ஆட்சியாளர்களையும் கண்டுள்ளது. பலவித சர்வாதிகாரிகளைப் பற்றிய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். உலகில் வெவ்வேறு நாடுகளில் ஆடை அணிவதற்கான வித்தியாசமான கலாச்சாரங்களும் உள்ளன. ஆனால் வினோதங்கள் நிறைந்த நாடான வட கொரியாவினுடைய சர்வாதிகாரியின் விருப்பங்களைக் கேட்டு நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த நாட்டில் மக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆம்!! இது மட்டுமல்ல, இங்கு இன்னும் பல விசித்திரமான தடைகளும் விதிக்கப்படுகின்றன.

நீல நிற ஜீன்சுக்கு தடை

வட கொரியா (North Korea) அவ்வப்போது பல சர்ச்சைகளுக்கு ஆளாகும் நாடு என்பது அனைவரும் அறிந்தது. இந்த நாட்டின் கொடூரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் (Kim Jong-Un) நீல நிறத்தில் ஜீன்ஸ் அணிந்தால் தனது நாட்டு மக்களை தண்டிக்கிறார். நீல நிற ஜீன்ஸ் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களின் முதல் தேர்வாகும். ஆனால், கிம் ஜாங் உன் தனது நாட்டில் நீல நிற ஜீன்சை தடை செய்துள்ளார். நீல நிற ஜீன்ஸ் மீது அவருக்கு ஒரு விசித்திரமான வெறுப்பு உள்ளது.

இதுதான் காரணம்

கிம் ஜாங் உன் அமெரிக்காவை (America) தனது எதிரி நாடாக கருதுகிறார். நீல நிற ஜீன்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்று கிம் ஜாங் உன் நம்புகிறார். எனவே, அவர் நாடு முழுவதும் நீல நிற ஜீன்ஸ் (Jeans) அணிவதை தடை செய்துள்ளார். யாராவது தவறுதலாக அதற்கு எதிராகச் சென்றால், அந்த நபர் சிறையில் அடைக்கப்படுவார். மேலும் கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது.

இணையமும் தடைசெய்யப்பட்டது

இது மட்டுமல்லாமல், கிம் ஜாங் தனது முழு நாட்டிலும் இணைய (Internet) பயன்பாட்டை தடை செய்துள்ளார். இதன் காரணமாக வட கொரியாவின் மக்களால் பெரும்பாலும் வெளி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிவதில்லை. உலகில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்குள்ள மக்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை எந்த கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அடிபணிந்து வாழ்கிறார்கள் என்பது கூட தெரியாது. இது மட்டுமல்ல, இந்த நாட்டில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கும் தடை உள்ளது. அது ஒரு குற்றமாகக் கருதப்படுகின்றது.

சிறையில் இருந்து யாரும் உயிருடன் திரும்புவதில்லை

குறிப்பிடத்தக்க வகையில், யாராவது வட கொரியாவில் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் உயிருடன் திரும்புவதில்லை. சிறைச்சாலையில் ஆயுதமேந்திய காவலர்களால் கைதிகள் பெரிதும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான கைதிகள் இறக்கின்றனர்.

கிம்மின் வீரர்கள் மிகவும் கொடூரமானவர்கள். கைதிகள் தங்கள் கைகளாலேயே தங்கள் கல்லறைகளை செதுக்க இந்த வீரர்களால் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்த அளவு கொடுமையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மரணத்திற்குப் பிறகு கைதிகள் தாங்கள் உருவாக்கிய கல்லறைகளிலேயே புதைக்கப்படுகிறார்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக