Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 டிசம்பர், 2020

டிக்டாக் தாகத்தை போக்க பேஸ்புக் அதிரடி: களமிறங்கும் Collab செயலி!

 

சுய வீடியோக்களை இணைக்க அனுமதி

இந்தியா சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்தியாவில் டிக்டாக், பப்ஜி, யூசிபிரவுசர் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு சீன பொருட்களை தவிர்க்கும்படியான உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசு முணைப்போடு செயல்படத் தொடங்கியது.

தனியுரிமையைப் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கை

இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டிக்டாக்கில் அதிக நேரம் செலவிட்ட பயனர்கள்

பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வந்தனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக அதன் பயனர்கள் இருந்தனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதன் பயனர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

டிக்டாக் இடத்தை நிரப்ப நடவடிக்கை

இந்த நிலையில் டிக்டாக்கின் இடத்தை நிரப்ப பல முன்னணி நிறுவனங்களும் செயலிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் பேஸ்புக் டிக்டாக் இடத்தை பிடித்துவிட வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம்

அதன்படி சமீபத்தில் இன்ஸ்டாவில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. டிக்டாக் தடைக்கு பிறகு இந்தியாவில் இன்ஸ்டா ரீல்ஸ் பெரும் வரவேற்பை பெறும் என அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆடியோவுடன் கூடிய 15 வினாடி வீடியோ இன்ஸ்டா ரீல்ஸில் உருவாக்க முடியும். டிக்டாக்குக்கு பதிலாக பலர் இன்ஸ்டா ரீல்ஸை ஏற்றுக் கொண்டனர் என்றாலும் முழுமையாக டிக்டாக் இடத்தை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

களமிறக்கிய Collab செயலி

இதற்கிடையில் பேஸ்புக் Collab என்ற செயலியை களத்தில் இறக்கியுள்ளது. இந்த செயலியை மேம்படுத்தும் பணியில் பேஸ்புக் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த செயலியானது அமெரிக்க ஐஓஎஸ் பயனர்களுக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இப்போதைக்கு கிடைக்கிறது

சுய வீடியோக்களை இணைக்க அனுமதி

Collab பயன்பாடானது அதன் பெயருக்கேற்ப மூன்று சுய வீடியோக்களை இணைக்க அனுமதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது மூன்று பேர் ஒரே பாடலின் வெவ்வேறு வரிகளை பாடி இணைக்கலாம் என கூறப்படுகிறது.

15 வினாடிகள் வீடியோ

Collab செயலியானது ரீல்ஸ் பயன்பாட்டை போலவே 15 வினாடிகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த செயலியை பேஸ்புக் 2021 ஆம் ஆண்டு மே மாதம் அப்டேட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக