
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 14.2 கிலோ மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை இப்போது சென்னையில் ரூ .660 அக அதிகரித்துள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் LPG gas cylinder விலை 670.50 ஆகவும், மும்பையில் 644 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளன. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 14.2 கிலோ மானியமில்லாத (LPG Subsidy) எரிவாயு சிலிண்டர் (LPG gas cylinder) விலை இப்போது சென்னையில் ரூ .660 அக அதிகரித்துள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் LPG gas cylinder விலை 670.50 ஆகவும், மும்பையில் 644 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
முன்னதாக 2020 டிசம்பர் முதல் நாளன்று, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் (LPG gas cylinders) விலைகளில் ஏற்றம் காணப்பட்டது. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (Commercial Gas Cyliner) விலை 55 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஹெச்பிசிஎல் (HPCL), பிபிசிஎல் ( BPCL), ஐஓசி (IOC) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் எதையும் செய்யவில்லை.
வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எல்பிஜியின் விலையில் சில மாற்றங்களை செய்கின்றன. ஆனால் இந்த மாதம் டிசம்பர் 1 ம் தேதியன்று விலை அதிகரிப்பு குறித்து குறிப்பிட்ட ஐஓசி (IOC), 14.2 கிலோ சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் அதிகரிப்பு இல்லை என்று கூறியது.
டெல்லியில் சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து ஏழாவது மாதமாக 594 ரூபாயாக இருப்பதாக நிறுவனம் கூறியது. ஆனால், இன்று 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .50 அதிகரித்து ரூ .644 என இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக