பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 50,000 வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்களை இழந்ததுள்ளதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது சமீபத்திய அறிக்கையின் முடிவுகள் மூலம் தெரிவித்துள்ளது. அதேபோல், டிராயின் அறிக்கை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள பகீர் ரிப்போர்ட்
டிராய் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த செப்டம்பர் இறுதியில் பிஎஸ்என்எல்-இன் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.8 மில்லியனிலிருந்து அக்டோபர் இறுதியில் 7.75 மில்லியனாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்
அதேபோல், ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவையின் கீழ் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 2.6 மில்லியன் பயனர் எண்ணிக்கையிலிருந்து அக்டோபரில் 2.67 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தது போல் ஜியோ முதலிடம்
இப்படி BSNL ஒரு புறம் சரிவைச் சந்திக்க, மற்றொரு புறம் ஏர்டெல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்று இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவு மட்டும் கடும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் படி கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து அக்டோபர் இடையிலான காலகட்டத்தில் சுமார் 406.36 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50,000 சந்தாதார்கள் தெறித்து ஓட்டம்
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை முடிவின் படி BSNL நிறுவனத்திடமிருந்து சுமார் 50,000 சந்தாதார்கள், தங்களின் சேவையை துண்டித்துவிட்டு வேறு நெட்வொர்க்கை தேர்வு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் மலிவு விலையில் சிறந்த சேவையை வழங்குவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவு பட்டியல் ரேங்கிங்
இந்தியாவின் வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவில் எந்தெந்த நிறுவனங்கள் என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம், அக்டோபர் மாத இறுதியில் ஜியோ நிறுவனம் சுமார் 406.36 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், ஏர்டெல் நிறுவனம் சுமார் 167.56 மில்லியன் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 120.49 மில்லியன் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் உள்ள BSNL
பிஎஸ்என்எல் நிறுவனம் அக்டோபர் மாத இறுதியில் சுமார் 50,000 சந்தாதார்களை இழந்து 17.03 மில்லியன் சந்தாதாரர்கள் என்கிற எண்ணிக்கையிலிருந்தது, பிறகு அக்டோபரில் 18.12 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்தினால் 50,000 பயனர்கள் BSNL நெட்வொர்க்கை நிராகரித்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக