பொதுத்துறையை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பிபிசிஎல்- லின் (BPCL) பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முயன்று வருகின்றது. இது ஏற்கனவே அறிந்த ஒரு விஷயம் தான்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி இலக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சுமார் 23 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க, கேபினெட் அமைச்சகமும் சமீபத்தில் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விற்பனைக்கு அனுமதி பெற வேண்டும்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே இதற்கு மார்ச் 2021க்குள் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது 2021ம் நிதியாண்டில் நிறைவடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த பரிவர்த்தனைக்கு பங்கு சந்தை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இலக்கினை அடைவது கொஞ்சம் கடினம் தான்
இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலாக உள்ள நிலையில், மார்ச் 31, 2021க்குள் அரசின் இந்த 2.1 டிரில்லியன் இலக்கு என்பது சாத்தியமில்லாததாக உள்ளது. ஏனெனில் இந்த இலக்கினை அடைய அரசுக்கு பல பணிகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தாக்கம் வேறு
போராட்டமான இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான பணிகள் முடங்கிவிட்ட நிலையில், மேற்கண்டு மூன்று மாதங்களில் அடைவது சாத்தியமில்லாததாகும். இதனால் மார்ச் 31வுடன் முடியவடைய இருக்கும் ஆண்டில், அரசு 65,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதனை அடைய வாய்ப்பில்லை. இந்த நிலையில் அடுத்தாண்டிலும் கொரோனாவால் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக அடைய முடியுமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
அரசின் பங்கு
எனினும் பிபிசிஎல்லில் மத்திய அரசிடம் இருக்கும் 52.98 சதவீதம் பங்கினை விற்கலாம் என்றும், இதன் மூலம் சுமார் 45,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான expression of interest தெரிவிக்க கோரி அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று நிறுவனங்கள் விண்ணபித்துள்ளதாக தெரிகிறது.
பிபிசிஎல்லின் திறன்
இதில் வேதாந்தா குழுமம் மற்றும் இரண்டு அமெரிக்கா நிறுவனங்கள் இந்த ஏலத்திற்காக விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்திய எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் பிபிசிஎல்லின் பங்கு 25.77% ஆகும். இதே இதன் மொத்த சுத்திகரிப்பு திறனில் 15.3% ஆகும். பிபிசிஎல் நிறுவனம், மும்பை, கொச்சின், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்புகளை செய்து வருகிறது.
பங்கு விலை நிலவரம்
இது சுமார் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றும் திறன் கொண்டது. பிபிசிஎல்லுக்கு 15,078 பெட்ரோல் பம்புகளும், 6004 எல்.பி.ஜி விநியோகஸ்தர்களும் உள்ளனர் என்பது கவனிக்கதக்கது விஷயம்.
இதற்கிடையில் இன்று பங்கு விடுமுறை என்ற நிலையில், கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, இதன் பங்கு விலையானது 0.84% ஏற்றம் கண்டு 377.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக