Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

உங்கள் WhatsAppஐ யாராவது அணுகிறார்களா? தவிர்க்க Tricks & Tips

உங்கள் WhatsAppஐ யாராவது அணுகிறார்களா? தவிர்க்க Tricks & Tips

உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் தனிப்பட்ட உரையாடல், படங்கள், வீடியோக்கள் என உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாராவது அனுமதியின்றி அணுகுகிறார்களா? தொழில்நுட்ப ரீதியில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க சிறந்த குறிப்புகளை நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் (WhatsApp) செயலி. நம்மில் பெரும்பாலோர் பல்வேறு நோக்கங்களுக்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம்.  உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் அணுகவில்லை என்று உறுதியாக சொல்லிவிட முடியுமா?  நமது அந்தரங்க விஷயங்களில் யாராவது தந்திரமாக முயன்றால் அதை சாமார்த்தியமாக முறியடிக்க இந்த குறிப்புகள் உதவும்.

1- இரட்டை அங்கீகாரம்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப்-இன் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் (Videos)யாருக்கும் கிடைக்க வேண்டாம் என்பதை இரட்டை அங்கீகாரத்தை (Two-factor authentication) எப்போதுமே செயல்படுத்தவும்.

2- கைரேகை பூட்டு (Finger print lock)

உங்கள் வாட்ஸ்அப் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்களைப் பாதுகாக்க கைரேகை மூலம் (Finger print lock) பூட்டிவிடலாம்.

முன்னதாக, வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) இப்போது இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவிருப்பதாக அறிவித்திருந்தது. 

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு, பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான வாட்ஸ்அப் கட்டண சேவை நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) ஒப்புதல் பெற்றது, 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) இணைந்து செயல்படவிருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப் தனது யுபிஐ பயனர் தளத்தை தரப்படுத்தப்பட்ட முறையில் விரிவாக்க முடியும், பதிவுசெய்யப்பட்ட பயனர் தளத்தில் 20 மில்லியன். "UPI ஒரு உருமாறும் சேவையாகும், இதற்கு முன்னர் எங்கள் டிஜிட்டல் (Digital), பொருளாதாரம் (Economic) மற்றும் நிதி பரிமாற்றம் ஆகியவற்றின் நன்மைகளை அதிக அளவில் பயனர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் கூட்டாகக் மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியாவின் வாட்ஸ்அப்பின் தலைவர் அபிஜித் போஸ் (Abhijit Bose) கூறினார். பேஸ்புக் நடத்திய 'Fuel for India' என்ற மெய்நிகர் நிகழ்வின் து இதை அபிஜித் போஸ் தெரிவித்தார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக