Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 ஜனவரி, 2021

இந்த மாதத்தில் எந்தெந்த ஒப்போ மொபைல்களுக்கு கலர்ஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்? இதோ பட்டியில்.!

ஒப்போ நிறுவனம் தேர்வுசெய்யப்பட்ட

ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக கவனம் செலுத்துகிறது.

இந்நிலையில் ஒப்போ நிறுவனம் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 11 சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுசார்ந்த பட்டியலை வெளிப்படுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ நிறுவனம் ட்வீட்டர் வழியாக கலர்ஓஎஸ் 11 அப்டேட்டின் ரோல்அவுட் விவரங்களை வெளிப்படுத்தியது. குறிப்பாக கலர்ஓஎஸ் 11 அப்டேட்டின் ஸ்டேபிள் பதிப்பு ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்க்பட்டுள்னது. அதாவது அனைவருக்கும் கிடைக்காது என்று அர்த்தம். குறிப்பிட்ட மாடல்களுக்கு ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு, எந்த பிழைகளும் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில் மொத்தமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

கலர்ஓஎஸ் 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியில்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2

ஒப்போ ஏ 93

ஒப்போ ரெனோ 4 ப்ரோ 5 ஜி

ஒப்போ எஃப் 17 ப்ரோ

ஒப்போ ஏ 72

ஒப்போ ரெனோ 3 4 ஜி

ஒப்போ ரெனோ 3 ப்ரோ 4 ஜி

ஒப்போ ரெனோ 4 லைட்

ஒப்போ ரெனோ 4 4 ஜி

அதேபோல் ஆஸ்திரேலியாவில் உள்ள ரெனோ 4 இசட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஜனவரி 6-ம் தேதி அப்டேட்டைப் பெறத் துவங்கியுள்ளது. பின்பு இந்தியாவில் உள்ள ஒப்போ எஃப்11, ஒப்போ எஃப்11 ப்ரோ (ஸ்டாண்டர்ட் மற்றும் மார்வெல்ஸ் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிஷன்) மாடல்களும் இன்று முதல் அப்டேட்டைப் பெறத் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 21 முதல் அப்டேட்டைப் பெறத் துவங்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

கலர்ஓஎஸ் 11 பீட்டா அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள்

ஒப்போ எஃப் 17, ஒப்போ எஃப் 17 புரோ, ஒப்போ ஏ 52 ஸ்மார்ட்போன்கள் கலர்ஓஎஸ் 11 பீட்டா அப்டேட்டை பெறும் என ஒப்போ நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒப்போ ரெனோ 4 இசட் 5ஜி பயனர்களுக்கு பீட்டா அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ரெனோ 2 எஃப் மற்றும் ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 26 முதல் பீட்டா அப்டேட்டைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக