
ஆப்பிள் நிறுவனம் 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதிய ஐபோன் 13 மாடல்களை அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஐபோன் 12 தொடரில் ஏற்பட்டது போல் (கோவிட்-19 லாக்டவுன் விளைவாக ஐபோன் 12 தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் தாமதமாக அறிமுகமாகின) இந்த ஆண்டு அறிமுகத்தில் எந்த விதமான தாமதமும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
அறிமுகத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் நிலைப்பாட்டில் கொரிய வெளியீடு ஆன ETNews வழியாக வரவிருக்கும் ஐபோன் 13 தொடரின் கீழ் எத்தனை மாடல்கள் வெளியாகும்? அதில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்? என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த 4 மாடல்களில் இரண்டு டாப் மாடல்களில் 120Hz OLED பேனல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 13 மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ETNews வெளியிட்ட தகவலின்படி, ஐபோனி 13 மினி சாதனம் ஆனது 5.4-இன்ச் 60 ஹெர்ட்ஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவையும், ஐபோன் 13 மாடல் ஆனது 6.1-இன்ச் அளவிலான 60 ஹெர்ட்ஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும். அதேபோல் ஐபோன் 13ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே 6.1 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஓ ஓஎல்இடி மற்றும் 6.7-இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐபோன் 13 தொடர் மாடல்களில் ஒஎல்இடி பேனல்கள் இடம்பெறும் என்பதை இதற்கு
முன்னதாகவே TheElec வழியாக வெளியான அறிக்கையும் சுட்டிக்காட்டி இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது. பின்பு கிரியேட்டிவ் பிளாக் வழியாக வெளியான மற்றொரு
அறிக்கையின்படி, ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் நாட்ச் அளவு குறைக்கப்படும், ஏனெனில்
முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவுக்கு பயன்படுத்தப்படும் சிப்பின் அளவும்
குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியான தகவல்) அனைத்தும் மிகவும் ஆரம்ப கால லீக்ஸ் தகவல்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
அதேபோல் 2021 செப்டம்பர் வரும் வரை நாம் ஐபோன் 12 தொடர் பற்றிய பெரிய பெரிய மாற்றங்களை பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் ஐபோன் 13 தொடரின் கீழ் சில புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக