
83 வயதான அமோ (Amou Haji), 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் பத்திரமாக இருக்கிறார். ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம்! குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறாராம்!
நீங்கள் பல ஆச்சரியமான பேஷன்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயத்தைக் கேட்டிருக்கவே முடியாது. அதைக் கேட்டால் ஆச்சரியம் மட்டுமல்ல, குமட்டிக் கொண்டு வரும். உலகிலேயே மிகவும் அழுக்கான நபர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை, அவருடைய கதையைக் கேட்டால் தலையே சுற்றுகிறது.
83 வயதான அமோ (Amou Haji), 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் (Water) கூட படாமல் பத்திரமாக இருக்கிறார். ஏனெனில் அவர் தண்ணீரைக் கண்டால் அச்சம்! குளித்தால் அவருக்கு நோய் வந்துவிடும் என்று பயப்படுகிறாராம்! இவர் சொல்வதைக் கேட்டால் குமட்டிக் கொண்டு வருகிறது.
அமோ ஹாஜிக்கும் சுத்தத்துக்கும் வெகுதூரம். அவருக்கு சுத்தம் (Cleanliness) என்றாலே அலர்ஜி! ஒருபோதும் தனது உணவையும் பானத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில்லை. ஈரானில் வசிக்கும் அமோ ஹாஜி, கடந்த 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று கூறுகிறார். அமோ ஹாஜியின் வாழ்க்கை முறையும் அதிர்ச்சளிப்பதாகவே இருக்கிறது.
சுத்தமான விஷயங்களை வெறுக்கிறார் அமோ
83 வயதான அமோ (World's Dirtiest Man) , 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட
படாமல் உலகிலேயே அழுக்கான மனிதராக இருந்தாலும், 83 வயதில் கூட ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை,
அவர் அழுக்காக இருப்பதால் தான் ஆரோகியமாக இருக்கிறார் என்று நம்புகிறார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் நாற்றத்துடன்
இருக்கும் Amou Haji கிராமத்திற்கு வெளியே தான் தங்க வேண்டியிருக்கிறது.
வித்தியாசமான உணவு முறை
இந்த அழுக்கு மனிதரின் உணவுப் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இறந்த
விலங்குகளின் அழுகிய இறைச்சியை (Meat) சாப்பிடுவதே அவருக்கு பிடிக்குமாம்! அந்த விலங்குகள்
விபத்தில் இறந்திருந்தாலும் சரி, இயற்கை வழியில் இறந்திருந்தாலும் சரி, அது பற்றி அவருக்கு
கவலையில்லை! அசைவ உணவையே விரும்பி சாப்பிடும் அமாவு (Amou), அழுகிய உள்நாட்டு கீரைகள்
மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்புகிறார். அமோவுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான
உணவு சாப்பிட பிடிக்காது! இப்படி பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார் அழுக்கு அமோ
(Amou)
Amou ஹாஜிக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. அவர் தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வெட்டவெளியில் வசிக்கிறார். இருப்பினும், கிராமவாசிகள் Amouக்காக ஒரு சிறிய குடிசையை கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு வெட்டவெளியே பிடித்திருக்கிறதாம். இவ்வளவு அழுக்காக இருந்தாலும், அழுகிய மாமிசத்தையும், காய்கறிகளையும் சாப்பிட்ட்டாலும் அவருக்கு எந்தவித நோயோ தொற்றொ இல்லை என்பது அதிசயம் தான். கிராம மக்கள் அவ்வப்போது வந்து, அழுக்கு மனிதரை சந்தித்துச் செல்கிறேன்.
சிகரெட் பிடிக்கும்
அமாவுக்கு சிகரெட் புகைப்பது மிகவும் பிடிக்குமாம்… சிகரெட் புகைப்பதிலும் அமோ ஒரு
புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். கிராமவாசிகள் அழுக்கு மனிதருக்கு கொடுக்கும் சிகரெட்டுகள்
முடிந்துவிட்டால் என்ன செய்வார் தெரியுமா? தனது சிகரெட் பைப்பில், விலங்குகளின் உலர்ந்த
மலத்தை போட்டு புகைப்பாராம்! இந்த உலகின் அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு, இப்படி
வாழ்வது தான் தனக்கு பிடித்திருப்பதாக உலகின் அழுக்கு மனிதர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக