
நிதி மோசடியிலும், பல்வேறு முறைகேடுகளைச் செய்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியை சக போட்டி வங்கிகள் வாங்கப் பெரிய அளவில் முன்வராத நிலையில், வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் இருக்கும் பார்த்பே வாங்க முன்வந்துள்ளது. இதனால் டிஜிட்டல் பேமெண்ட் சந்தை நிறுவனங்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள்
யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி நெருக்கடியிலும், மோசடியிலும் சிக்கியுள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைக் காப்பாற்றும் முயற்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களின் வைப்பு நிதிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாராக் கடன் பிரச்சனை
இந்திய வங்கித்துறையில் பல வருடங்களாகவே வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றுக்குப் பின் இந்திய வங்கித்துறையில் வாராக் கடன் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதற்கிடையில் பல முன்னணி வங்கிகள் மோசடியில் சிக்கியுள்ளது.
ரீடைல் வங்கி சேவை
இந்நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில், இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் தனது டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அடித்தளமாகக் கொண்டு ரீடைல் வங்கி சேவையில் இறங்க முயற்சி செய்து வருகிறது.
பார்த்பே மற்றும் சென்டிரம்
இந்தச் சூழ்நிலையில் பிஎம்சி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கூட்டுறவு வங்கியான பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியைக் கைப்பற்றப் பெரிய அளவிலான போட்டிகள் இல்லாத நிலையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை நிறுவனமான பார்த்பே மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான சென்டிரம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இவ்வங்கியைக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டணி விண்ணப்பத்தின் மூலம் பிஎம்சி வங்கியில் டெப்பாசிட் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 100 சதவீத தொகையும் முழுமையாகக் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
லட்சுமி விலாஸ் வங்கி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போலவே ரிசர்வ் வங்கி பிஎம்சி வங்கி மீதும் 23 செப்டம்பர் 2019ல் 1000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி கொடுத்தது. இதன் பின் 26 செப்டம்பர் 2019ல் இதன் அளவீட்டை 10,000 ரூபாய் வரையில் உயர்த்தியது.
இவ்வங்கியை ரிசர்வ் வங்கி தனது முழுக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்த நிலையிலும் 6மாதம் இந்த வித்டிரா கட்டுப்பாடுகள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎம்சி வங்கியின் மோசடி
பிஎம்சி வங்கி 5 முதல் 6 வருடம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது மட்டும் அல்லாமல் இவ்வங்கி தனது மொத்த கடன் வர்த்தகத்தில் சுமார் 73 சதவீத கடனை HDIL என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குக் கொடுத்து மோசடி செய்துள்ளது.
இவ்வங்கியின் 8,300 கோடி ரூபாய் கடன் வர்த்தகத்தில் 6,226 கோடி ரூபாய் அதாவது 73 சதவீத கடன் HDIL நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக