Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..!

பிரத்தியேக வங்கி

ஆசியாவிலேயே 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை உருவாக்கப் புதிதாக ஒரு வங்கியைத் துவங்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் ரகசியமாகத் திட்டமிட்டு வருகிறது.

இந்த வங்கி குறித்த அறிவிப்பு தான் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக இருக்கப் போகிறது எனத் தகவல் கிடைத்துள்ளது.

மோடி அரசின் புதிய திட்டம்

2020ல் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் தள்ளியுள்ளது, இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகிய இரு முக்கியப் பிரச்சனைகளை ஒரே நேரத்தில் சமாளிக்கப் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மத்திய அரசு

பிரத்தியேக வங்கி

இந்தியாவில் துறைமுகம், சாலை மற்றும் மின்சாரம் (உற்பத்தி மற்றும் விநியோகம்) ஆகிய திட்டங்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக இயங்கும், நிதியுதவி செய்யும் ஒரு வங்கியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அறிவிக்கப்படும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

இந்தச் சிறப்பு வங்கியை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய், அதாவது 13.7 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்த வங்கியை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தியா இன்பராஸ்டக்சர் பைனான்ஸ் அமைப்பையும், இந்த அமைப்பில் இருக்கும் 2000 கோடி ரூபாய் தொகையும் இப்புதிய வங்கியில் இணைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

முதற்கட்டமாக இப்புதிய வங்கியில் அரசு முதலீட்டு செய்யவும், பின்னாளில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் கூடுதல் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்து ஆலோசனை செய்ய மத்திய நிதியமைச்சகம் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டு முதலீடு

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் மந்தமாக இருக்கும் இந்த நிலையில், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி செலவு செய்வதில் மிகப்பெரிய சவாலை மத்திய அரசு எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் உள்கட்டுமான திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பது பெரும் சவால்.

இந்திய வங்கிகள்

மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை மார்ச் 2020 உடன் முடிந்த 2 வருடத்தில் உட்செலுத்தியுள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டு உள்ள நிதிப் பற்றாக்குறை மற்றும் மோசமான வருவாய் வளர்ச்சி நிதி உட்செலுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக