Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 ஜனவரி, 2021

உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த 2 சக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்த பஜாஜ் ஆட்டோமொபைல்!

உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த 2 சக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்த பஜாஜ் ஆட்டோமொபைல் உருவாகியுள்ளது.

புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 சக்கர வாகன நிறுவனம் பஜாஜ் ஆட்டோ. பஜாஜ் ஆட்டொ நிறுவனத்தின் சந்தை மூலதனம் திங்கட்கிழமை 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

சந்தை மூலதனம் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த 2 சக்கர நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ உருவெடுத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 75 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2020, டிசம்பர் மாதம் 3,72,532 வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்றுள்ளது.

நேற்றைய சந்தை நேர முடிவில், பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் 1.12 சதவீதம் அதிகரித்து 3,521.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. சந்தை மூலதனம் 101,919.45 ரூபாயாக இருந்தது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!