Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

இது எப்படி இருக்கு?.. 200 கிராம் குறைவாக இருந்த சர்க்கரை...கடைக்காரரின் பதில் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...

--------------------------------------------------

கலக்கலான ஜோக்ஸ்...!

--------------------------------------------------

அப்பா : டேய் எந்த சப்ஜெக்ட்ல நூறு மார்க் வாங்கியிருக்கற?..

மகன் : எல்லா சப்ஜெக்ட் மார்க்கையும் கூட்டிப் பாருப்பா... நூறு வரும்..

அப்பா : 😖😖

--------------------------------------------------

ராமு : மச்சி! வாயில இருக்கற சிகரெட்டை எடுடா... சகுனம் சரியில்

ஜான் : ஏன்?... பூனை குறுக்க போச்சா

ராமு : பூனை போகலடா... உங்க அப்பாதான் குறுக்க போனாரு பாக்கலையா..

ஜான் : 😟😟

--------------------------------------------------

கண்ணன் : என்ன சார் நைட் வீட்ல ஒரே சத்தமா இருந்துச்சு

கோபால் : வேற ஒண்ணுமில்லபா... என் பொண்டாட்டிய திட்டிகிட்டு இருந்தேன்.

கண்ணன் : அவங்க தான் அம்மா வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆச்சே

கோபால் : அதனால் தான் தைரியமா சத்தம் போட்டு திட்டினேன்

கண்ணன் : 😩😩

--------------------------------------------------

உங்களுக்கு தெரியாதா?

--------------------------------------------------

 

இரண்டு கிலோமீட்டர் நடந்து 🚶 ரேஷன் கடைக்கு சென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்

 

ஒரு கிலோமீட்டர் திரும்பி வரும்போது, எனக்குத் தெரிந்த கடையில் சர்க்கரையை நிறுத்திப் பார்த்தேன்

 

இருநூறு கிராம் குறைவாக இருந்தது... கடைக்காரரிடம் விசாரித்தேன்

 

அவன் சொன்னத கேட்டு எனக்கு ப்ரசர் 🙆‍️ ஏறிடுச்

 

அவன் சொன்னது

 

நீங்க ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்தீங்களா... இல்லையா

 

 

நடந்த சுகர் குறையும்னு உங்களுக்கு தெரியாதா !!😫😫😧

--------------------------------------------------

 

இது எப்படி இருக்கு...

--------------------------------------------------

 

கரண்ட் தொட்டாலே ஷாக் அடிக்குது..

அப்படின்னா எப்படி தொடாமல் அதை கண்டுபிடித்திருக்க முடியும் ஒன்னும் புரியலையே... 🤔

 

நீங்கள் கல்வி தந்தை ஆகனுமா, அதற்கு ஒரு யோசனை

உங்களுக்கு குழந்தை பிறந்ததும் 'கல்வி"-னு பேர் வெச்சிருங்க.🤑

 

வீட்டில ஸ்டவ் ரிப்பேரானா மனைவிக்கு சந்தோஷம்

ஃப்ரிட்ஜ் ரிப்பேரானா கணவனுக்கு சந்தோஷம்.😃

 

வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்குற மாதிரி

குளிர் காலத்துல டீ பந்தல் வைச்சா நல்லா இருக்கும்...


 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக