Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 ஜனவரி, 2021

28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரை; தினமும் 4GB டேட்டா வழங்கும் 3 Vi திட்டங்கள்!

வோடபோன் ஐடியாவின் டபுள் டேட்டா நன்மையின் கீழ் தினசரி 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் 3 திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இதோ.கூடுதல் செலவில்லாமல், அதாவது FREE ஆக 4ஜி டேட்டா கிடைத்தால், அதை யார் தான் வேண்டாம் என்பார்கள்? முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் பாணியை எப்போது ஆரம்பித்ததோ, அந்த நாளில் இருந்து இந்திய தொலைத் தொடர்புத் துறையில் போட்டிக்கும், சலுகைகளும், இலவசங்களுக்கும் பஞ்சமே இல்லை என்றே கூறலாம்.


இருப்பினும், வோடபோன் ஐடியா (Vi) தான் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளை வழங்கும் நாட்டின் ஒரே ஆபரேட்டர் ஆகும். இது நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

குறிப்பிட்ட டபுள் டேட்டா நன்மையை வழங்கும்படி, வி நிறுவனத்திடம் மொத்தம் மூன்று திட்டங்கள் உள்ளன. அவைகள் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்.

இந்த திட்டங்கள் அனைத்துமே தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகின்றன. ஆக டபுள் டேட்டா சலுகையுடன் இணைய இவைகள் அனைத்துமே அதன் சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

இருப்பினும் மீதமுள்ள நன்மைகள் இந்த திட்டங்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. ஒருவேளை நீங்களொரு Vi ப்ரீபெய்ட் பயனர் என்றால், அல்லது புதிதாக வி சிம் கார்டை வாங்க போகிறீர்கள் என்றால், கீழ்வரும் 3 திட்டங்களையும் கவனத்தில் கொள்ளவும்.

Vi ரூ.299 திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம், Vi ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். உடன் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். செல்லுபடியாகும் காலம் வரை வாடிக்கையாளர்கள் Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகலையும் பெறுவார்கள்.

Vi ரூ.449 திட்டம்:

ரூ.449 திட்டமானது கிட்டத்தட்ட ரூ.299 திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், செல்லுபடியாகும் காலம் முழுதும் Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகல் போன்றவைகள் கிடைக்கும். ஆனால் இதன் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும்.

Vi ரூ.699 திட்டம்:


ரூ.699 உடன், மற்ற இரண்டு திட்டங்களிலிருந்து கிடைக்கும் அனைத்து நன்மைகளும் மாறாமல் இருக்கும். இருப்பினும், இது இரண்டை விடவும் கூடுதல் வேலிடிட்டியை வழங்கும். இது 84 நாட்களுக்கு சேவையை வழங்கும். அதாவது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் செல்லுபடியாகும்.

நன்மைகளை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், செல்லுபடியாகும் காலம் முழுதும் Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகல் போன்றவைகளை வழங்கும்.

கூடுதல் நன்மை:

ரிலையன்ஸ் ஜியோவைப் போலன்றி வோடபோன் ஐடியா நிறுவனம் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அம்சத்தை வழங்குகிறது. அதாவது சந்தாதாரர்கள் வாரம் முழுவதும் பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதிக்கு ரோல் ஓவர் செய்து கொள்ளலாம். இதன் வழியாக சந்தாதாரர்கள் முழு வாரத்தின் மீதமுள்ள டேட்டா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக