Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

மூளைக்கு வேலை.. 2 கேள்விகளுக்கு ஒரே பதில்.. என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!

----------------------------------------------------------

பாபு : ஹலோ! வக்கீல் குமாரசாமி இருக்காறா?

கோபு : இல்லை! அவர் செத்து போய் ஒரு வாரம் ஆச்சு.

பாபு : ஹலோ வக்கீல் குமாரசாமி..

கோபு : யோவ் என்ன விளையாடுறியா, அவர் செத்து போய் ஒரு வாரம் ஆச்சுங்கறேன், திரும்ப திரும்ப கேட்டுட்டுருக்கியே...

பாபு : அதை திரும்ப திரும்ப கேக்கறதுல ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. அதான்...

கோபு : 😖😖

----------------------------------------------------------

ஆசிரியர் : போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா.

மாணவன் : சார், தமிழ்நாடு பூரா கேட்டுட்டேன்;. சிட்டி பஸ் இருக்குன்றான், ஏர்பஸ் இருக்குன்றான், எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான், ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.

ஆசிரியர் : 😄😄

----------------------------------------------------------

திரும்ப பெற முடியாதவை...!!

----------------------------------------------------------

உடலை விட்ட உயிர்...

பேசி விட்ட வார்த்தை...

கடந்து விட்ட நாட்கள்...

இழந்து விட்ட இளமை...

கொடுத்து விட்ட வாக்கு...

----------------------------------------------------------

மூளைக்கு வேலை..!

----------------------------------------------------------

பேருந்தில் பாபு காலில் காயத்துடன் இருந்தார்..

அருகே இருந்தவர் உங்களுக்கு எப்படி அடிபட்டது? என கேட்கிறார்.

அதே சமயம் பஸ் நடத்துநர் நீங்க எங்க போகணும்? டிக்கெட் எடுங்க என கேட்கிறார்.

அடிபட்ட நபர் இருவருக்கும் ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டார்.

அது என்ன வார்த்தை?

விடை :

செங்கல்பட்டு

----------------------------------------------------------

குறிப்புகளை வைத்து வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்...!!

----------------------------------------------------------

1. _மி_கி_ம் (கடலில் வாழும் விலங்கு)

2. க_ணா_ (உள்ளதைக் காட்டும்)

3. _வா_ (பறக்கும் விலங்கு)

4. _ட்_யா_ம் (அணிகலன்)

5. _ண்_ன் (கண் சிமிட்டும்)

6. ம_ங்_த்_ (பறவை)

விடை :

1. திமிங்கிலம்

2. கண்ணாடி

3. வெளவால்

4. ஒட்டியாணம்

5. விண்மீன்

6. மரங்கொத்தி

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக