Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

யாருக்கு வேலை அதிகம்... இது சிரிப்பதற்கான நேரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!

--------------------------------------------------------

ஒருவர் : ஓட்டப்பந்தயமெல்லாம் வெச்சு வேலைக்கு ஆள் எடுத்துக்கிட்டு இருக்காங்களே போலீஸ் வேலைக்கா?

மற்றொருவர் : நீங்க வேற பைனான்ஸ் கம்பெனிக்கு!

ஒருவர் : 😜😜

--------------------------------------------------------

டாக்டர் : வாயில் என்ன கட்டு?

நோயாளி : எனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க?

டாக்டர் : 😷😷

--------------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

--------------------------------------------------------

நம் செயல்களில் நம்மை நம்புவது - நம்பிக்கை...

அடுத்தவரை நம்புவது - எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு வீணாகும்...

நம்பிக்கையே எப்போதும் கைகொடுக்கும்...

கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை...

கல்தான் காணாமல் போகிறது...

விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்...

நாம் கடலாக இருப்போம்...!!

தேடலை குறைத்துக்கொள்...

நிம்மதியாவாய்...

எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள்...

சந்தோஷமாவாய்...

அதிக பேச்சை நிறுத்திக்கொள்...

தேடப்படுவாய்...!!

--------------------------------------------------------

யாருக்கு வேலை அதிகம்?

--------------------------------------------------------

வேலைக்கு போறவங்களுக்கு வேலை செய்ற இடத்துல மட்டும்தான் பதில் சொல்லணும்....

ஆனா..

வேலைக்கு போகாதவங்களுக்கோ பாக்குறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்...

இப்போ சொல்லுங்க யாருக்கு வேலை அதிகம்.😜😜

--------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

--------------------------------------------------------

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம் :

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாது. அதைப்போல் வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலை பொறுத்து கொள்வது.

--------------------------------------------------------

ஓரெழுத்து ஒருமொழி!!

--------------------------------------------------------

தே - நாயகன், தெய்வம், அருள், தேடு

தை - மாதம், தையல்

நா - நாக்கு, சொல், நான்

நீ - நின்னை, தள்ளு

நே - அன்பு, நேயம்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக