Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம்.. என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

---------------------------------------------------

மணி : என்ன குவாலிட்டி இருக்கு சார்... வரவர ஒன்னுலயும் குவாலிட்டியே இல்ல.

கவின் : என்ன சார் ஆச்சு? ஏன் சலிச்சுக்கிறீங்க?

மணி : சீகக்காய், ஷாம்பூ, சோப்பு எல்லாம் போட்டும், நைட் அடிச்ச சரக்கோட நாத்தம் போகமாட்டேங்குதே!

கவின் : 😱😱

---------------------------------------------------

ஆசிரியர் :Good Night" என்பதை தமிழில் கூறு..

மாணவன் : 'கொசு வத்தி" சார்...

ஆசிரியர் : 😟😟 

---------------------------------------------------

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா !!

---------------------------------------------------

 

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

 

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

 

3. உதடு பிரிக்காம 'ப"-னு சொல்ல முடியாது.

 

4. சொல்லி பாத்துகிட்டீங்க.

 

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

 

7. சிரிச்ச சிரிப்புல 5ம் நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

 

8. நம்பர் 5 இருக்கா?-னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

 

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

 

10. அடுத்தவங்களுக்கும் கூப்பிட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு 'பகிர்"

 

அந்த 5-வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா?

 

அட இப்போ 5 Star Review போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க...!

 

---------------------------------------------------

சிறந்த பொன்மொழிகள்..!

---------------------------------------------------

 

👉 உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.

 

👉 தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை. விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

 

👉 பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.

 

👉 பொறுப்பானது கனவுகளில் இருந்தே தொடங்குகிறது.

 

👉 நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.

---------------------------------------------------

விடுகதைகள்...!!

---------------------------------------------------

 

1. ஆளுக்கு துணை வருவான். ஆனால் அவன் பேச மாட்டான். அவன் யார்?

 

விடை : நிழல்.

 

2. உணவை கையில் எடுப்பான். ஆனால் உண்ண மாட்டான். அவன் யார்?

 

விடை : அகப்பை.

 

3. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள். அவள் யார்?

 

விடை : தென்றல்.

 

4. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது. அது என்ன?

 

விடை : வானம்.

 

5. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம். அது என்ன?

 

விடை : தண்ணீர்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக