Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஜனவரி, 2021

தடுக்க முடியாத நேரம்... கடக்க துடிக்கும் இளமை... காமெடி கலாட்டா... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------

காமெடி கலாட்டா...!!

---------------------------------------------------------

அருண் : அந்தப் பாடகருக்கு குரல், கடவுள் கொடுத்த வரம்னு சொல்றாங்களே? 

குமார் : ஆமாம்! 

அருண் : உங்களுக்கும் தெரியுமா?

குமார் : அவர் வாயைத் திறக்கறதோட சரி, அதிலேருந்து என்ன வரும்னு கடவுளுக்குத்தான் தெரியும்... 

அருண் : 

---------------------------------------------------------

பெண் : உங்க மாமாக்கிட்ட போன் கொடு தம்பி...

குட்டி பையன் : கொடுக்குறேன்... உங்க பேரு என்ன?

பெண் : உங்க மாமாக்கிட்ட சொல்லு தம்பி... அவரோட உயிர் பேசுறேன்னு...

குட்டி பையன் : அப்படியா?... ஆனா போன்ல உங்க பேர லூசுன்னு Save பண்ணி வெச்சுருக்காரு...

பெண் : 😡😡

---------------------------------------------------------

பிறமொழி சொற்கள்...!!

---------------------------------------------------------

1. ஜனங்கள் - மக்கள்

2. ஜில்லா - மாவட்டம்

3. கஜானா - கருவூலம்

4. சர்க்கார் சமஸ்தானம் - அரசு

5. பந்துமித்ரர் - சுற்றமும் நட்பும்

6. நமஸ்காரம் - வணக்கம்

---------------------------------------------------------

இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!

---------------------------------------------------------

பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது. 

மனம் இசைந்த மணம். 

பணம் பழம்பணம், பிம் பனம் பழம். 

மலை மொழி இனிய மணி மொழி.

---------------------------------------------------------

இதுதான் வாழ்க்கை...!!

---------------------------------------------------------

தானாக உயரும் வயது...

விடாமல் துரத்தும் காலம்...

தடுக்க முடியாத நேரம்...

கடக்க துடிக்கும் இளமை...

காலை தடுக்கும் சமூகம்...

தொட வேண்டிய இலக்கு...

இத்தனை போராட்டம்தான் வாழ்க்கை...!!

---------------------------------------------------------

குறளும், பொருளும்...!!

---------------------------------------------------------

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

பொருள் :

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

---------------------------------------------------------

ஓரெழுத்து ஒருமொழி...!!

---------------------------------------------------------

நை - வருந்து, நைதல், இகழ்ச்சி, நோய்

நொ - நொண்டி, துன்பம்

நோ - நோய், நோவு, வருத்தம், வலி

நௌ - மரக்கலம்

பா - பாட்டு, நிழல், அழகு, பாம்பு

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக