>>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • >>
  • 13-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 2025-2026 சனிப்பெயர்ச்சி – திருக்கணிதம் vs. வாக்கிய பஞ்சாங்கம்
  • >>
  • 11-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நரம்பு கோளாறுகளுக்கு தீர்வு வழங்கும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!
  • >>
  • 10-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 09-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • சர்ப்ப தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் – திருவோத்தூர்
  • >>
  • 06-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 ஜனவரி, 2021

    படித்ததில் பிடித்தது.. ஒரு குட்டிக்கதை.. சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

    ------------------------------------------------------

    சிரிக்கலாம் வாங்க...!

    ------------------------------------------------------

    ராமு : டாக்டர் நீங்க பல் எடுப்பீங்களா? 

    டாக்டர் : எடுப்பேன் ஒரு பல்லுக்கு 100 ரூபாய். 

    ராமு : அப்போ இந்த கவர்ல 4 பல்லு இருக்கு எடுத்துக்கிட்டு 400 ரூபாய் கொடுங்க... 

    டாக்டர் : 😩😩

    ------------------------------------------------------

    ஆசிரியர் : ராமாயணத்தில் வில்லை உடைத்து யார்?

    (மாணவன் அழுகிறான்)

    ஆசிரியர் : ஏன்டா அழுவுற நா பாடத்துல இருந்து தான கேள்வி கேக்குறேன்.

    மாணவன் : சார் சத்தியமா நா இல்ல சார்.

    ஆசிரியர் : 😨😨

    ------------------------------------------------------

    சிந்திக்க தெரியாத முட்டாள்...!! 

    ------------------------------------------------------

     

    ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றார். வழியில் இருட்டி விட்டது. 

     

    எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

     

    இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.

     

    அவனும் சரி என்றான். சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான்? என்பதை சோதிக்க வெளியே வந்தார்.

     

    அவனும், அரசே நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா? அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்...

     

    நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான், அரசே கடலில் உப்பு தானாக வந்ததா? அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்....

     

    அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் 'இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

     

    அவன் சொன்னான், 'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா? அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்."

    ------------------------------------------------------

    படித்ததில் பிடித்தது...!!

    ------------------------------------------------------

    எது தானம்? - யாரிடமும் எதையும் கேட்காதிருப்பது.

    யார் நண்பன்? - நம்மை பாவம் செய்யாமல் தடுப்பவன்.

    எது அலங்காரம்? - சீரான வாழ்வே அலங்காரம்.

    எது வாக்கியத்திற்கு அலங்காரம்? - சத்தியமான வார்த்தைகள்.

    மின்னல் போல் தோன்றி மறைவது எது? - தீயவர் நட்பு. 

    மனிதனுக்கு பாக்கியம் எது? - ஆரோக்கியமான வாழ்க்கை.

    கஷ்டமான காரியம் எது? - மனதை அடக்கி வைப்பது

     குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக