Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 20 ஜனவரி, 2021

தாய்.. தந்தை.. மனைவியிடம் இதை நிரூபித்து காட்டுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!

----------------------------------------------------

மனைவி : ஏங்க... நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச ஐயர் இறந்துட்டாரு..

கணவன் : ஆண்டவன் இருக்காண்டி... செஞ்ச பாவம் சும்மா விடுமா...

மனைவி : 😡😡

----------------------------------------------------

ஜோசியர் : நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனாக அமைவார்-ன்னு இந்த கிளி ஜோசியம் சொல்லுது மா...

பொண்ணு : இப்படி மொட்டையா சொன்னா எப்படி? குறிப்பா எந்த பையன்னு உங்க கிளி கிட்ட கேட்டு சொல்லுங்க... 

ஜோசியர் : 😨😨

----------------------------------------------------

நிதர்சனமான உண்மை...!

----------------------------------------------------

தாயிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று...

தந்தையிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று...

மனைவியிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று...

சகோதரியிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று...

சகோதரனிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை உனக்கு பக்க பலமாய் இருப்பேன் என்று...

மகனிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று...

மகளிடம் நிரூபியுங்கள்... கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று...

----------------------------------------------------

வெற்றி மந்திரங்கள்...!!

----------------------------------------------------

🌟 உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள்...

🌟 முடிந்து போனவற்றை பற்றி கவலைப்படுவதுடன் செய்ய வேண்டியதை பற்றி திட்டமிடுங்கள்...

🌟 பாதியில் விட்டுப்போக எண்ணாதீர்கள்...

🌟 முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள்...

🌟 கேள்வி கேட்க பயப்படாதீர்கள்...

🌟 அனைவரையும் சமமாக நடத்துங்கள்...

🌟 மற்றவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்...!!

----------------------------------------------------

இன்றைய கடி...!!

----------------------------------------------------

அதிக Weight தூக்குற பூச்சி எது? 

மூட்டைப் பூச்சி...😎

பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது? 

தொப்பை...😝

வேலைக்கு போற விலங்கு எது? 

பனி கரடி...😩

கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது? 

'Mushroom...😜 

தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்? 

செலவாகும்...😃

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!