சியோமி நிறுவனம் அதன் மி ஏ3 ஸ்மார்ட்போனின் விற்பனையை திடீரென்று நிறுத்தியுள்ளது. ஏனெனில் மி ஏ3 ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த ஆண்ட்ராய்டு அப்டேட்டிற்கு பிறகு அதில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் கிளம்பின. இதை தொடர்ந்து தான் சியோமி நிறுவனம் இந்தியாவில் மி ஏ3 ஸ்மார்ட்போனின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
வெளிவந்த தகவலின்படி ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை நிறுவிய பின், ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆப் ஆகும் சிக்கலை எதிர்கொள்வதாக சமூக ஊடக தளங்களின் வழியாக பெரும்பாலான பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999-விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் சியோமி மி ஏ3 ஸமார்ட்போனை வைத்துள்ள பயனர்கள், மொபைலை சரி செய்ய சியோமி மையங்களில் அதிகம் பணம் கோரப்படுவதாக புகார் எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிப்பட்டவர்களின் ஸ்மார்ட்போன்கள் சேவை மையங்களில் இலவசமாக
சரி செய்து தரப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த இடத்தில் தயாரிப்பு உத்தரவாதம் சரிபார்க்கப்படாது.
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக