Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 ஜனவரி, 2021

பொள்ளாச்சி வழக்கு: அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் எஸ்கேப்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் மாயமாகியுள்ள நிலையில் சிபிஐ போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி மிரட்டல் பாலியல் வழக்கு தற்போது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இளம்பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டு வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சபரிராஜன், மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் மேற்கண்ட கும்பல் புகார் கொடுத்த பெண்ணை மட்டுமின்றி கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி பெண்கள், பள்ளி மாணவிகள் என பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வந்தது தெரியவந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பல பெண்கள் இவர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்பதால், வழக்கை தீவிர படுத்தக்கோரி கோவையில் ஆங்காங்கே போராட்டஙள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.

சிபிசிஐடி போலீசார் வழக்கை கையில் எடுத்ததும், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானாவர்களில் சிலர் அதிமுக பிரமுகர்களின் நெருக்கமானவர்கள் என்று தெரிய வரவே அரசியல் வட்டாரங்களில் பொள்ளாச்சி வழக்கு பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. ஆனால், திருநாவுக்கரசு கைது சம்பவத்துக்கு பிறகு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.


பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (34), முன்னாள் இளைஞரணி இணை செயலாளர் ஹேரன்பால் (29), பாபு (28) ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப், செல்போன், பென் டிரைவ் ஆகியவற்றை சோதனையிட்டதில் அதில் அவர்கள் இளம்பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் கிடைக்கப்பெற்றன.

அந்த கும்பலில் இவர்களுடன் சேர்ந்து பொள்ளாச்சியில் அதிமுகவைச் சேர்ந்த நகராட்சி முன்னாள் தலைவர், முன்னாள் கவுன்சிலர் மற்றும் வேறொரு நபர் இருந்துள்ளனர். ஆனால், அருளானந்தம் உள்ளிட்டோர் கைதானதையடுத்து இவர்கள் மூவரும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், வழக்கில் தொடர்புடையவர்களை கொக்கி போட்டு பிடிக்க சிபிஐ தீவிரமாக உள்ளது.

தற்போது தப்பிய மூவரும் வெளிநாடு தப்பி செல்ல முயல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், சிபிஐ அவர்கள் தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், சபரிராஜன், திருநாவுக்கரசு கொண்ட கும்பல் அடிக்கடி சென்று வந்த விடுதிகள், ரெசார்ட் உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்து வருகின்றனர

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக