---------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!
---------------------------------------------------------
கணக்கு ஆசிரியர் : அறிவ பெருக்குங்கடா அப்ப தான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்.
மாணவன் : சார் அறிவ பெருக்க சொல்றீங்க அத எத்தனையால பெருக்க-ன்னு சொல்லவே மாட்டீங்கிறீங்களே.
கணக்கு ஆசிரியர் : 😱😱
---------------------------------------------------------
பாட்டி : ஒரு ஊர்ல ஒரு வயசான தாத்தா இருந்தார்.
பேரன் : போ பாட்டி... ஒரு வயசுன்னா... அது தாத்தா இல்ல... குழந்தை.
பாட்டி : 😛😛
---------------------------------------------------------
சமையல் குறிப்பு...!!
---------------------------------------------------------
துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
---------------------------------------------------------
டெர்ரர் தத்துவம்..!!
---------------------------------------------------------
உலகத்தில் ரொம்ப கஷ்டமான 4 விஷயம் என்னன்னு தெரியுமா?
🐍 பாம்பு வாய்க்கு லிப்ஸ்டிக் போடுறது.
🐜 எறும்பை புடிச்சு கிஸ் பண்றது.
🐘 யானையை மடியில் வச்சு கொஞ்சுறது.
🐝 கொசுவுக்கு டிரஸ் போடுறது.
---------------------------------------------------------
விடுகதைகள்..!!
---------------------------------------------------------
1. அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
2. அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஷ்டம். அது என்ன?
3. தலையைச் சீவினால் தாளில் நடப்பான். அவன் யார்?
4. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?
5. உயர்ந்த மலை அருகே உடன்பிறப்புகள் இருவர்! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை, பேசுவதும் இல்லை. அவர்கள் யார்?
விடை :
1. முகம் பார்க்கும் கண்ணாடி
2. அப்பளம்
3. பென்சில்
4. செல்போன்
5. மூக்கு, கண்.
---------------------------------------------------------
இன்றைய கடி...!!
---------------------------------------------------------
ஒன்னு கொட்டணும்னா
ஒன்னு கொட்டாமா இருக்கணும்...
அது என்ன?
.
.
.
.
.
.
.
.
கெட்டி மேளம், முடி...
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக