ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்சில் மாடல் நம்பர் RMX3092-இன் கீழ் ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தான் ரியல்மி 8 என்று அழைக்கப்படும்.
மேலும் நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களான முகுல் சர்மா மற்றும் அபிஷேக் யாதவ் ஆகிய இருவருமே குறிப்பிட்ட மாடல் நம்பர் ஆனது ரியல்மி 8 தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்பு கிடைக்கப்பெற்ற கீக்பெஞ்ச் பட்டியலும் ஸ்மார்ட்போனைப் பற்றி மிகவும் குறைவாகவே வெளிப்படுத்துகிறது.
வெளியான தகவலின்படி, ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். பின்பு இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும். தவிர ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அதேபோல் ரியல்மி 8 சாதனம் ஆனது பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி 8 பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைத்தளத்திலும் காணப்பட்டதாகவும் டிப்ஸ்டர் யாதவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த சாதனம் அறிமுகமான உடனேயே இந்திய சந்தைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக