ஆப்பிள் நிறுவனம் விரைவில் இந்த ஆண்டில் ஆப்பிள் ஏர்டேக்ஸ், ஆப்பிள் சிலிக்கான் உடனான புதிய மேக்புக் மாடல்கள் மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி (AR) சாதனம் ஆகியவற்றை 2021 ஆம் ஆண்டில் குப்பெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனத்திடமிருந்து நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை புகழ்பெற்ற ஆய்வாளர் மிங்-சி குவோ பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஏர்போட்கள் மற்றும் மினி-எல்இடி டிஸ்பிளேக்கள் கொண்ட சாதனங்களும் இந்த வரிசையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். கூடுதலாக, ஒரு பிரபலமான ஆப்பிள் டிப்ஸ்டர் ஆப்பிள் நிறுவனத்திலிருந்தே வந்ததாகக் கூறப்படும் ஏர்டேக்ஸின் 3 டி அனிமேஷனைப் பகிர்ந்துள்ளார். இப்போதைக்கு, குபெர்டினோ மாபெரும் மேற்கூறிய சாதனங்களில் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் கவனத்திற்கு.
AirTags என்பது ஒரு டைல் போன்ற கண்காணிப்பு கருவி. இது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட உடைமைகளைக் கண்டறிந்து கண்காணிக்க அனுமதிக்கும், மேலும் அவை குறிக்கப்பட்ட உடைமைகள் இடமிருந்து விலகிச் செல்லும்பொழுது பயனருக்கு நோட்டிபிகேஷன் அனுப்பி நினைவுபடுத்தும் என்று அறிக்கையில் ஆய்வாளர் மிங்-சி குயோ கூறியுள்ளார். ஆப்பிள் ஏர்டேக்குகள் சில காலமாகச் செய்திகளில் மட்டும் வந்துகொண்டிருக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள 3D ரெண்டர் தகவலை வைத்துப் பார்க்கையில் இவை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக்கப்படும் என்று தெரிகிறது. டிப்ஸ்டர் ஜான் ப்ராஸர் யூடியூபில் வதந்தியான ஏர்டேக்ஸின் 3D அனிமேஷனையும் பகிர்ந்துள்ளார், இது ஒரு மென்பொருள் பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக்குகள் புளூடூத் LE மற்றும் அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) இணைப்பை ஆதரிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக