இந்த சைபர் செக்யூரிட்டி நிபுணரிடம்... நீங்கள் ஏன் பேஸ்புக் மெசஞ்சரைப் பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்பதற்கான நியாமான காரணம் இருக்கிறது.வாட்ஸ்அப்பிற்கும் (அதன் புதிய ப்ரைவஸி கொள்கைகளுக்கும்) தாய் நிறுவனமாக இருப்பது பேஸ்புக் தான் என்கிற புரிதலும், பேஸ்புக்கின் சொந்த மசேஜிங் பிளாட்பார்ம் தான் - மெசஞ்சர் ஆப் என்கிற தெளிவும் உங்களுக்கு இருப்பின் ஏன் வாட்ஸ்அப் மட்டும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும்? பாதுகாப்பு காரணங்களுக்காக அது மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்? மெசஞ்சரும் தானே எதிர்க்கப்பட வேண்டும், புறக்கணிக்கப்பட வேண்டும்?
இதிலும் பாதுகாப்பு ஓட்டைகள் இருக்கிறதா?
பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பை பயன்படுத்தும் 1.3 பில்லியன் பயனர்களில் நீங்களும் ஒருவர்
என்றால், திடீர் வாட்ஸ்அப்பின் திடீர் பின்னடைவு உங்களுக்கான ஒரு தெளிவான
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆம், மெசஞ்சர் ஆப்பின் "தகவல் சேகரிப்பானது" வாட்ஸ்அப்பை விட மிகவும்
ஆபத்தானது. ஆனால், அதைவிட மோசமான புதிய சிக்கல் ஒன்று வெளிப்பட்டுள்ளது. அது
உங்களை மெசஞ்சர் ஆப்பை விட்டு வெளியேற வைத்தாலும் அச்ச்சரியப்படுவதற்கில்லை.
என்ன சிக்கல்?
சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், நீங்கள் பேஸ்புக் மெசஞ்சரைப்
பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மெசேஜ்களை எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்
செய்து பாதுகாக்கும் வேறு எதாவது ஒரு தளத்திற்கும் செல்லுங்கள் என்று அறிவுரை
கூறியுள்ளார்.
ஏன்? எதற்காக?
உங்கள் மெசேஜ்களின் தனியுரிமை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சைபர்
பாதுகாப்பு நிபுணர் ஜாக் டாஃப்மேன் கருத்துப்படி, நீங்கள் பேஸ்புக் மெசஞ்சரைப்
பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அங்கே, உங்கள் மெசேஜ்களுக்கு இங்கே
பாதுகாப்பு இல்லை.
மேலும் இந்த சைபர் பாதுகாப்பு நிபுணர், வாட்ஸ்அப்பின் குழப்பமான ப்ரைவஸி கொள்கை
மாற்றமானது பயனர்களை திசைதிருப்பி விட்டுள்ளது. நாம் உண்மையாக எதற்காக கவலைப்பட
வேண்டும் என்றால், பேஸ்புக்கின் மெசஞ்சர் ஆப் மீதும், அது எவ்வளவு மோசமானது
என்பதின் மீதுமே என்று கூறியுள்ளார்.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் "அந்த" ஆயுதம் மெசஞ்சரிடம் கிடையாது!
பயனர்கள் வாட்ஸ்அப்பை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல் இருக்க வாட்ஸ்அப் பயன்படுத்தும்
மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் என்னவென்றால், "உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை
எங்களால் பார்க்கவோ, உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, இது பேஸ்புக்கிற்கும்
பொருந்தும்" என்பது தான்.
இருப்பினும் (டாஃப்மேனின் கூற்றுப்படி) நீங்கள் ஒரு மெசஞ்சர் பயனராக இருந்தால்,
மேற்குறிப்பிட்ட பாதுகாப்பும், வளையமும் உங்களுக்குள் அணுக கிடைக்காது. அதாவது
உங்கள் மெசேஜ் மற்றும் கால்களுக்கு வாட்ஸ்அப்பில் கிடைக்கும் அளவிலான பாதுகாப்பு
கூட கிடைக்காது.
மெசஞ்சரில் இருக்கும் சீக்ரெட் கான்வர்ஷேனின் கையறு நிலை?!
நீங்கள் ஒரு “secret conversation" பயன்படுத்தாவிட்டால், வாட்ஸ்அப்
மெசேஜ்களைப் பாதுகாக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் (மறைகுறியாக்கம்) பேஸ்புக்
மெசஞ்சருக்கு பொருந்தாது. இந்த விருப்பம் இரண்டு நபர்களுக்கு இடையேயான மெசேஜ்களை
மட்டுமே பாதுகாக்கிறது, ஆதரிக்கிறது. க்ரூப்களுக்குள் அல்ல மற்றும் இந்த secret
conversation விருப்பத்தை ஒருவர் கைமுறையாகவே செயல்படுத்தப்பட வேண்டும், என்கிறார்
டோஃப்மேன்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக