குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியவர் இவர்தான் !!
🌟 சாய கிரகம் என்று அழைக்கப்படும் நிழல் கிரகமான ராகு பெண் கிரகமாவார். இவர் சுகபோக சுகத்திற்கும், யோக சுகத்திற்கும் காரகம் பெற்றவர்.
🌟 ஒருவருக்கு எதிர்பாராத செல்வ நிலையை அளித்து குடிசையில் இருந்தவர்களை ஒரே நாளில் கோபுரத்தில் வாழ்பவர்களாகவும், கோபுரத்தில் வாழ்ந்தவர்களை குடிசையிலும் வாழ வைக்கும் ஆற்றல் கொண்டவர்.
🌟 ராகுவை போல் கொடுப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் அளிக்க இருக்கும் செல்வநிலையை எவராலும் தடுக்க இயலாது. அதேபோல் ராகு தடுக்க நினைப்பதை எவராலும் கொடுக்க இயலாது.
ராகு பற்றிய சில குறிப்புகள் :
🌟 தந்தை : விப்ரசித்து
🌟 தாய் : சம்ஹிகை
🌟 ராகு பிரதி அதிபதி : துர்க்கை மற்றும் காளி
🌟 வசிக்கும் இடம் : செழிப்பான வயல்வெளிகள் மற்றும் காடுகள்
🌟 வலிமை உடைய பொழுது : அனைத்து பொழுதுகளிலும் வலிமை கொண்டவர்.
🌟 ராசியை கடக்கும் காலம் : 1 1/2 வருடங்கள்
🌟 ராகுவின் நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன், குரு, சனி
🌟 ராகுவின் பகை கிரகங்கள் : சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்
🌟 ராகுவிற்கு சமமான கிரகம் : இல்லை
🌟 ராகுவின் தசா காலங்கள் : 18 வருடங்கள்
🌟 ராகுவின் நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவின் குணநலன்கள் :
🌟 ராகு பொதுவாக ஒருவருக்கு குணநலன்களில் கெடுதல்களை ஏற்படுத்தக்கூடியவர்.
🌟 தீயப் பழக்கவழக்கம், மற்றவர்களை ஏமாற்றுவது, விதண்டாவாதம் செய்வது, பிடிவாத குணம் கொண்டவராகவும், வரட்டு வேதாந்தம் பேசுபவர்களாகவும் மாற்றக்கூடியவர்.
🌟 மறைமுக செயல்பாடுகளுடைய வாழ்க்கை முறைகளை அளிக்கக்கூடியவர்.
🌟 குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது போன்றவற்றை உருவாக்கக்கூடியவர்.
மேஷ ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
🌟 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் ராகு, பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.
🌟 புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கனவுகளை காணக்கூடியவர்கள்.
🌟 எதையும் வாதாடி வெற்றிப்பெறும் திறமை கொண்டவர்கள்.
🌟 ஆடம்பரமான செயல்களை விரும்பாதவர்கள்.
🌟 புதிய செயல்களை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 தன்னை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள்.
🌟 செயலில் வேகமும், சில சமயங்களில் சோம்பல் குணமும் கொண்டவர்கள்.
🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.
🌟 எளிமையாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 பல சிந்தனைகளை பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்கக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்களை காட்டிலும் தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
வழிபாடு :
🌟 துர்க்கா தேவியை வழிபாடு செய்வதால் பலவிதமான எதிர்ப்புகளையும் வெற்றிக்கொள்ள முடியும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக