Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 ஜனவரி, 2021

கவுதம் மேனனுடன் மீண்டும் இணையும் சிம்பு..!

 


நடிகர் சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் வேகம் காட்டி வரும் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து சிம்பு ராம் இயக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. அதை உறுதி செய்யும் விதமாக ராம், சிம்பு இருவரும் சந்தித்தும் பேசினர்.

இப்போது புதிய தகவலாக சிம்புவை சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கனேஷ், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவை வைத்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் சார்பில் படம் தயாரிக்கிறார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் வியாழக்கிழமை சிம்புவை சந்தித்து ஐசரி கணேஷ் வழங்கி உள்ளார்.

எப்போதும் எனது அண்ணன் கவுதம் மேனனுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஐசரி கனேஷின் வேல்ஸ் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் உடன் புதிய தொடக்கம் என்று சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நல்ல நாளில் சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில், மிக அற்புதமான ஸ்கிரிப்ட்டில் விரைவில் புதிய படம் என்று வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷன்ல் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிம்பு ஐசரி கனெஷ் தயாரிப்பில் 3 படங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Happy as always to team up with my brother @menongautham and a new beginning with @IshariKGanesh @VelsFilmIntl @AshKum19 #SilambarasanTR47 God bless https://t.co/4F4Gc8SS0j

— Silambarasan TR (@SilambarasanTR_) January 28, 2021

 

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக