Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 ஜனவரி, 2021

சியோமி பயனர்கள் கவனத்திற்கு: புதிய அப்டேட்டால் உருவாகும் சிக்கல்.. பாதிக்கப்படும் பயனர்கள்.. உஷார்.!

வெளியான ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டால் சிக்கல்

சியோமி நிறுவனம் 2019 ஆம் ஆண்டு Mi A3 ஸ்மார்ட்போன் மாடலை ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதள பாதிப்புடன் ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பல நாட்கள் காத்திருப்புக்குப் பின்னர், இந்த Mi A3 ஸ்மார்ட்போனிற்கு நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 வெர்ஷன் அப்டேட்டை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, சியோமி நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனை இந்த மாடலுக்கு இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

வெளியான ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டால் சிக்கல்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்த பல பயனர்களுக்குப் பல சிக்கல்கள் எழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் சரியாக பூட்டிங் ஆகாமல் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்கள் டிவிட்டர் மூலம் சியோமி நிறுவனத்திடம் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

டிவிட்டர் பக்கத்தில் குவிந்த புகார்

சியோமியின் டிவிட்டர் பக்கத்தில் குவிந்துவரும் புகார்களுக்கு இன்னும் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இந்த அப்டேட்டில் கோளாறு உள்ளது, பக் உள்ளது என்பதை இன்னும் நிறுவனம் அதன் பக்கத்திலிருந்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஏன் என்பது சரியாக நமக்குத் தெரியவில்லை. பூட்டிங் சிக்கல் இருப்பதால் பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

அவசரப்பட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

சியோமி இந்த கோளாறை எப்பொழுது சரி செய்து, அடுத்த புதிய அப்டேட்டை வெளியிடும் என்பது குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆகையால், இந்த புதிய அப்டேட்டை சியோமி பயனர்கள் அவசரப்பட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது. சியோமி நிறுவனத்திடம் இருந்து வரும் வரை பயனர்களை கதிரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். டெக் மற்றும் அறிவியல் தொடர்பான செய்திகளுக்கு கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Mi A3 ஸ்மார்ட்போன் விலை மற்றும் ஸ்டோரேஜ்

நினைவுகூர, Mi A3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் ஆகிய இரண்டு வேரியண்ட் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டது. 4ஜிபி ரேம் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 11, 999 என்ற விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.14,999 என்ற விலையில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் ஆரம்பக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!