----------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
----------------------------------------------
பாஸ்கர் : டாக்டர், என்னோட பையன் வீட்டுல வெச்சிருந்த பிளேட முழுங்கிட்டான். நீங்கதான் வந்து எடுத்து விடணும்.
டாக்டர் : பதறாதீங்க.. நீங்க எதுவும் செஞ்சிரலியே.. நான் வர்ற வர வெய்ட் பண்ணுங்க.
பாஸ்கர் : நீங்க வர்ற வர வெய்ட் பண்ண முடியாது டாக்டர். நான், வீட்டுல இன்னொரு ரேசர் செட் வெச்சிருக்கேன். அத வெச்சி ஷேவ் பண்ணிடுறேன். நீங்க பொறுமையா வாங்க பரவாயில்ல.
டாக்டர் : 😮��
----------------------------------------------
ராமு : அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்.
சோமு : எதுக்கு?
ராமு : ஆபரேஷன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்.
சோமு : 😄😄
----------------------------------------------
பழமொழியும்... விளக்கமும்...!!
----------------------------------------------
பழமொழி :
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
விளக்கம் :
கருகு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதில் இருக்கும் காரம் குறையாது. அதன் பலன் என்னவோ அதை குறையாமல் தரும். அது போன்றே, யாரையும் சிறியவன் என எண்ணி ஒதுக்கிவிடக்கூடாது. அவராலும் பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கலாம்.
----------------------------------------------
உடல் ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்...!!
----------------------------------------------
👉 சாப்பிட்ட உடன் சில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. உடலில் கொழுப்பு சேரவும், செரிமானப் பிரச்சனைகள் வரவும் இது காரணமாகிவிடும். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதே நல்லது.
👉 சாப்பிட்ட உடனே போய் படுத்து தூங்கி விடாதீர்கள். இது சாப்பிட்டவை நன்றாக செரிமானம் ஆகாமல் வாயு சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரக் காரணமாகிவிடும். உடல் எடையும் அதிகரிக்கும்.
👉 அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு ஓடினால், இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும்.
👉 காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடைசியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக