Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜாக் மா-வை காணவில்லையா?- அலிபாபா நிறுவனருக்கு வந்த சோதனை

அலிபாபா நிறுவனம் ஜாக் மா

சீன கோடிஸ்வரரான ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக பொது தளத்தில் தோன்றாமல் இருக்கிறார். இதையடுத்து தற்போது ஜாக் மா இருக்கும் இடம் குறித்த மர்மம் நீட்டிக்கிறது. மேலும் சமீபத்தில் அவர் நடுவராக பங்கேற்க வேண்டிய ரியாலிட்டி ஷோவில் கூட அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தகவல்களை இவரை காணவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது

அலிபாபா நிறுவனம் ஜாக் மா

சீன இகாமர்ஸ் தளமான அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக் மா காணாமல் போகிவிட்டாரா எங்கே இருக்கிறார் என்ற கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் குரூப் ஐபிஓவை சீனா சமீபத்தில் தடை செய்தது.

ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிகள்

சீன அரசாங்கத்திடம் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு ஜாக் மா அந்தஸ்து இழக்கும் நிலை ஏற்பட்டது. ஜாக்மா தலைமையில் செயல்படும் ஆன்ட் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் இது ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை என ஐபிஓ தடை செய்யப்பட்டது.

சீன அரசின் முக்கிய காரணம்

சீன அரசின் முக்கிய காரணம் அலிபாபா கொள்கையை ஏற்றுக் கொண்டால் அலிபாபா தீவிர வளர்ச்சியடையும் எனவும் பிற நிறுவனங்கள் வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் என சீன அரசு கவலை கொண்டதாக சீன பத்திரிக்கை ஒன்று தெரிவித்தது. மேலும் இதற்கு அரசியல் ரீதியிலான காரணம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

வஞ்சகமாக செயல்படுகிறது அலிபாபா

அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் சீன அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனங்களை ஜாக் மா முன்வைத்தார். அதேபோல் தொடர்ந்து அலிபாபா நிறுவனம் மீது சீனா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அலிபாபா நிறுவனம் அதன் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பை தராமல் வஞ்சகமாக செயல்படுகிறது என விசாரணையை நிறுவனம் தொடங்கியது.

இரண்டு மாதங்களாக ஜாக் மா வெளியில் தோன்றவில்லை

இந்தநிலையில் இரண்டு மாதங்களாக ஜாக் மா வெளியில் தோன்றாமல் இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் புதிய தொழில்முனைவோர்கள் கண்டறியும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக் மா நடுவராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஜாக் மாவுக்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறு அதிகாரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த அதிகாரி ஜாக்மா வேறு பணி இருப்பதால் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

ஜாக் மா மறைவாக இருப்பது கவலை அளிக்கிறது

இரண்டு மாதங்களாக ஜாக் மா மறைவாக இருப்பது கவலை அளிப்பதாக சில உலக தொழிலதிபர்கள் கவலை தெரிவித்தனர். அதேபோல் சீன அரசுக்கு இணங்க செயல்பட ஜாக் மா செயலாற்றி வருவாதல் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. ஜாக் மாவுக்கு உண்மையில் என்ன ஆனது என்பதை சீன அரசு விளக்க வேண்டும் என பலர் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!