Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 25 ஜனவரி, 2021

வட்டம்... சதுரம்... இதில் எது புத்திசாலி... இன்றைய கடி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

-------------------------------------------

ராமு : நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.-ல சீரியல் பாத்து அழுதுகிட்டிருந்த... சீரியல் பார்த்து அழுவுற முதல் ஆம்பிளை நீதான்டா.

சோமு : டேய்! அது சீரியல் இல்லடா. என் கல்யாண CD டா!

ராமு : 😄😄

-------------------------------------------

பாலு : என்ன சார் பெட்ரோல் டேங்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கிறீங்க?

கிருஷ்ணன் : மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடுமின்னு சொன்னாங்க அதான்!

பாலு : 😛😛

-------------------------------------------

கடவுளிடம் மனிதன் கேட்டான்...!!

-------------------------------------------

பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க...

ஆனா பொண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க?

கடவுள் சொன்னார்,

'நான் பொண்ணுங்களை மட்டும் தான் படைத்தேன்."

அவங்களைக் கட்டிக்கிட்டுப் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டது நீங்கதான்.

-------------------------------------------

விடுகதைகள்...!!

-------------------------------------------

1. வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை. அவன் யார்?

2. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது. அவன் யார்?

3. வெளியில் விரியும், வீட்டில் சுருங்கும். அது என்ன?

4. தட்டினால் பறப்பான், தடவினால் சாவான். அது என்ன?

விடை :

1. போட்டோ

2. முள்

3. குடை

4. கொசு

-------------------------------------------

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!!

-------------------------------------------

இதில் எது புத்திசாலி?

◼ சதுரம்

⚫ வட்டம்

விடை :

சதுரம் தான் புத்திசாலி ஏனென்றால் அதுக்கு 4 மூலைகள் இருக்கிறதாம்.

-------------------------------------------

இன்றைய கடி...!!

-------------------------------------------

பாக்கு மரத்தில் பாக்கு இருக்கும்...

தேக்கு மரத்தில் தேக்கு இருக்கும்...

ஆனா பன மரத்தில் பணம் இருக்குமா?😎😇😇

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!