-----------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
-----------------------------------------------
ராமு : உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
சோமு : தெரியல..
ராமு : பல் டாக்டருக்குதான்.
சோமு : எப்படி?
ராமு : அவர்தான் எல்லோர் 'சொத்தை"யும் பிடுங்குராறே.
சோமு : 😣😣
-----------------------------------------------
அம்மா : டேய் ஏன்டா முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிட்டு அலையறே...?
பையன் : இதுதாம்மா இப்போ ஃபேஷன்.
அம்மா : நாயே... உங்க அக்காவ பொண்ணு பாக்க வந்தவங்க உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காங்க...
பையன் : 😝😝
-----------------------------------------------
யோகவும்... தியானமும்...!!
-----------------------------------------------
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது யோகா...
மனைவிய திட்டுவதை காதில் வாங்கிக் கொள்ளாவிட்டால் அது தியானம்.
யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே.😜😜
-----------------------------------------------
இது எப்படி இருக்கு?
-----------------------------------------------
🐒 மூன்று குரங்குக் குட்டிகள் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பி விட்டன.
🙈 ஒன்று டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது பிடிப்பட்டது.
🙉 இன்னொன்று ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது பிடிப்பட்டது.
மூன்றாவது..?
🙊 இதோ இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது பிடிப்பட்டது...!
-----------------------------------------------
சிந்தனை துளிகள்...!!
-----------------------------------------------
கோபம் வந்தபோது,
வாயை மூடிக்கொள்!
குழப்பம் வந்தபோது,
கண்களை மூடிக்கொள்!
தோல்வி வந்தபோது,
காதுகளை மூடிக்கொள்!
வெற்றி வந்தபோது,
மனதை மூடிக்கொள்!
-----------------------------------------------
மூளைக்கு வேலை...!!
-----------------------------------------------
பால்காரர் ஒருவரிடம் இரண்டு காலி ஜக்குகள் உள்ளன. அந்த ஜக்கு ஒன்று மூன்று லிட்டரும், மற்றொன்று ஐந்து லிட்டரும் பிடிக்கும்..
ஆனால் பால்காரர் பாலை வீணாக்காமல் ஒரு லிட்டர் பாலை எவ்வாறு அளப்பார்?
விடை :
பால்காரர், முதலில் மூன்று லிட்டர் ஜக்கில் பாலை ஊற்றி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் நிரப்பிவிட்டார்.
மீண்டும் அந்த மூன்று லிட்டர் ஜக்கை நிரப்பி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றினார். எனவே ஒரு லிட்டர் அந்த மூன்று லிட்டர் ஜக்கில் தங்கிவிட்டது.
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக