Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

2ஆவது நாளாக பேருந்துகள் இல்லை... ஸ்தம்பித்த புதுச்சேரி


புதுச்சேரியிலும் 2ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 2ஆவது நாளாக பேருந்துகள் இல்லை... ஸ்தம்பித்த புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று இரண்டாவது நாளாக தமிழக அரசு பேருந்துகள் 90 சதவீதம் இயக்கப்படாததால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 100க்கணக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட வடமாநிலத்திலிருந்து புதுச்சேரி வழியாக தென் மாவட்டஙகளுக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பேருந்துகள் 90 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக சேவைகள் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இருந்தாலும் 75 சதவீத தமிழக அரசு பேருந்துகளின் சேவையை நம்பி தான் புதுச்சேரி மாநில பயணிகள் உள்ளனர்.

எனவே ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பயணிகள், வியாபாரிகள் மற்றும்.பொதுமக்கள் பெரிதும் பாதித்துள்ளார்கள். மேலும் இன்று வார விடுமுறை தினம் என்பதால் வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டஙகளில் இருந்து வரும் சுற்றுலாவினர்கள் வெகுவாக பாதிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக