
எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் தனது 5 ஜி நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று இன்று அறிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சன்மீத் கோச்சார் 2021 ஆம் ஆண்டிற்கான பிராண்டின் திட்டத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், "நாங்கள் இந்தியாவை ஒரு முக்கியமான சந்தையாகப் பார்க்கிறோம், முதலில் நாம் செய்யப்போவது இந்திய சந்தைக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளைத் தயாரிப்பது தான், இரண்டாவதாக மலிவு விலையில் 5 ஜி போன்களை வழங்குவதாகும். மேலும், இந்த ஆண்டு மலிவு விலை 5 ஜி சாதனங்களை எவ்வாறு தொடங்கலாம் என்பதில் நிறுவனம் கவனம் கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
மேலும், "எங்கள் ஒட்டுமொத்த கவனம் போட்டியாளர்களிடமிருந்து எங்கள் வேறுபாட்டைத் தெரிவிப்பதில் இருக்கும். எங்கள் வேறுபாடு ஒரு சிறந்த, எதிர்கால-ஆதார மென்பொருளைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் இருக்கும், உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நோக்கியா ஸ்மார்ட்போனை வாங்கும் போது, உங்களுக்கு அதிக காலம் நீடிக்கும் நிலைக்கும் மென்பொருளைப் பெறுவீர்கள், பின்னர் உங்கள் சாதனத்தை நீங்கள் அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படாது'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக மாறுவதற்கும் எங்களிடம் திட்டமுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவை நமது உள்நாட்டு நுகர்வுக்கு மட்டுமல்லாமல், ஏற்றுமதி பார்வையிலும் மதிப்பீடு செய்வோம், இந்த ஆண்டு நான்கு புதிய நோக்கியா 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் உறுதிபட கூறியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் முழுவதுமாக ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படாது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இவற்றில் முதல் இரண்டு 5 ஜி ஸ்மார்ட்போன்கள் இந்த 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த இரண்டு முக்கிய 5 ஜி ஸ்மார்ட்போன்கள் இந்த 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் 2021ம் ஆண்டில் நோக்கியாவிடமிருந்து நான்கு 5ஜி போன்கள் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக