இலவசமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் வேண்டுமா?- இதோ எளிய வழிமுறைகள்
ஊர்க்கோடாங்கி
திங்கள், பிப்ரவரி 01, 2021
தற்போதைய காலகட்டத்தில்
வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான்
பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில்
தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி
தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் போட்டிப்போட்டுக்
கொண்டு ஓடிடி அணுகலை வழங்குகிறது.
ஓடிடி
அணுகல் திட்டங்கள்
இந்தியாவில் டெலிகாம்
ஆபரேட்டர்கள் தங்களது திட்டங்களோடு ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றனர். கடந்தாண்டு
முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நன்மைகள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கிடைத்து
வருகிறது. பல ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஜபி அணுகல்
கிடைத்து வருகிறது. இது ப்ரீமியம் அணுகல் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
அதன்படி ரூ.600 குறைவான ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
அணுகல் குறித்து பார்க்கலாம்.
ரூ.600
கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.600 கீழ்
கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.
ரூ.401, ரூ.598 மற்றும் ரூ.499 என்ற விலையில் திட்டங்கள் கிடைக்கிறது. இது தினசரி
3 ஜிபி தரவையும் 6 ஜிபி போனஸ் தரவையும் வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில்
வரம்பற்ற குரலழைப்பு, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகலும் கிடைக்கிறது.
டிஸ்னி
ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகல்
ரூ.499 ரீசார்ஜ் திட்டம்
வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 1.5 ஜிபி டே்டா என 56 நாட்கள் வேலிடிட்டியுடன்
வருகிறது. ரூ.589 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு
ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியாகும். கூடுதலாக
இந்த திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா அணுகல் கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது.
பாரதி
ஏர்டெல் ரூ.600-க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டம்
பாரதி ஏர்டெல் ரூ.600-க்கு
கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி ப்ள்ஸ் ஹாட்ஸ்டார் அணுகல் குறித்து
பார்க்கலாம். ரூ.401, ரூ.448, ரூ.599 ஆகிய திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
அணுகல் கிடைக்கிறது. ரூ.401 திட்டம் குரலழைப்பு போன்ற நன்மைகள் இல்லாமல் 30 ஜிபி
தரவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடனும் வழங்குகிறது.
ரூ.599
ரீசார்ஜ் திட்டம்
ரூ.448 திட்டத்தில் தினசரி 3
ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல் இதில் இலவச அமேசான்
பிரைம் அணுகலை சோதனை அடிப்படையில் வழங்குகிறது. ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில்
தினசரி 2 ஜிபி டேட்டாவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதிலும் இலவச
அமேசான் பிரைம் அணுகல் சோதனை அடிப்படையில் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டத்திலும்
வரம்பற்ற குரலழைப்பு, 100 எஸ்எம்எஸ்களை தினசரி வழங்குகிறது. அதோடு இந்த
திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக