Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

த்ரிஷ்யம், என் வாழ்க்கையில் நடந்த கதையா?: இயக்குநர் விளக்கம்


த்ரிஷ்யம் 2 படத்தை பார்த்தவர்கள் இது இயக்குநர் ஜீத்து ஜோசபின் நிஜ வாழ்வில் நடந்திருக்கும் போன்றே என்று மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் இது குறித்து ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து த்ரிஷ்யம் 2 படத்தை இயக்கி கடந்த 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட்டார் ஜீத்து ஜோசப்.

த்ரிஷ்யம் 2 படம் அனைவருக்கும் பிடித்துவிட்டது. படம் ரிலீஸானதில் இருந்தே சமூக வலைதளங்களில் அது குறித்து தான் பேச்சாக உள்ளது. படத்தை பார்க்கும் பிரபலங்களும் அதை பாராட்டி ட்வீட் போடுகிறார்கள்.

த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு இரண்டு மகள்கள். ஜீத்து ஜோசபுக்கு இரண்டு மகள்கள். அதனால் ஜீத்து ஜோசப் தன் வாழ்க்கையில் நடந்ததை தான் படமாக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று மீம்ஸ் போட்டனர்.

இந்நிலையில் இது குறித்து ஜீத்து ஜோசபிடம் கேட்டதற்கு, ஜார்ஜ் குட்டிக்கு நடந்தது போன்று என் வாழ்வில் நடக்கவில்லை. இது வெறும் கற்பனைக் கதையே என்றார்.


த்ரிஷ்யம் 3 படத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறார் ஜீத்து ஜோசப். மூன்றாம் பாகம் பற்றி அவர் கூறியதாவது,

த்ரிஷ்யம் 3 கிளைமாக்ஸை மோகன்லால் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறினேன், அவர்களுக்கு பிடித்துவிட்டது. ஆனால் த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு தற்போதைக்கு துவங்காது. படப்பிடிப்பு துவங்க குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும். ஸ்க்ரிப்ட்டில் சில விஷயங்களை சேர்க்க வேண்டியிருக்கிறது.

த்ரிஷ்யம் 2 பற்றி சமூக வலைதளங்களில் பேசிக் கொள்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நான் விமர்சனங்களை வரவேற்கிறேன் என்றார்.

ஜார்ஜ் குட்டிக்கு நடந்தது போன்று உங்களுக்கு நிஜத்தில் நடந்தால் என்ன செய்வீர்கள் என்று ஜீத்துவிடம் கேட்டபோது, அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம். ஜார்ஜ் குட்டிக்கு நடந்தது போன்று எனக்கு நடந்தால் நானும் அவர் செய்ததை தான் செய்திருப்பேன். இது எதிர்பார்க்காமல் நடந்த கொலை பற்றியது. அதனால் தன் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி செய்வதை நான் குறை சொல்ல மாட்டேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக