அர்பன் எல்ஒய்எஃப் 3 வண்ண கலவைகள் மற்றும் மிட்நைட் பிளாக் பேண்ட் கேஸ் உடன் ஃப்ரோஸ்ட் ஒயிட் பேண்ட் சில்வர் கேஸ், பிங்க் சால்மன் பேண்ட் ரோஸ் கோல்ட் கேஸ் ஆகிய அமைப்புகளோடு வருகிறது.
இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்பேஸ் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரிவு சந்தையை விரிவுப்படுத்தியுள்ளது. இன்பேஸ் அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலமாக ஆரம்ப விலை ரூ.4999 முதல் கிடைக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 1 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அதோடு இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்களை மார்ச் 5 ஆம் தேதிக்குள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் URBANLYF என்ற குறியீட்டை பயன்படுத்தி பெறலாம்.
அர்பன் எல்ஒய்எஃப் 3 வண்ண சேர்க்கைகளில் வருகிறது. இது எளிதாக மாற்றக்கூடிய பட்டைகளுடன் வருகிறது. ஜெட் பிளாக் கேஸ் உடன் மிட்நைட் பிளாக் பேண்ட், சில்வர் கேஸ் உடன் ப்ரோஸ்ட் வைட் பேண்ட் மற்றும் ரோஸ் கோல்ட் கேஸ் உடன் பிங்க் சால்மன் பேண்ட் ஆகியவை கிடைக்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் அழைப்பு அம்சம் உடன் வருகிறது. பயனர் தங்களது ஸ்மார்ட்போனை வெளியே எடுக்காமல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலமாகவே கட்டுப்படுத்தலாம்.
அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் முழு டச் எச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 240*240 ரெசல்யூஷனுடன் வருகிறது. வாட்டர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலமாக குரலஅழைப்பு, சமூகவலைதளம், மெசேஜ் மற்றும் பருவநிலை விவரங்களை கட்டுப்படுத்தலாம். அதோடு கேமரா மற்றும் இசை கட்டுப்பாடு அமைப்பும் இருக்கும்.
அர்பன் எல்ஒய்எஃப் ஸ்மார்ட்வாட்ச் கூடுதலா பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதயதுடிப்பு, தூக்கம், இரத்த அழுத்தம், இசிஜி கண்காணிப்பு மூலம் ஆரோக்கியத்தை கண்காணிக்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் குரலழைப்பு இல்லாமல் 7 நாட்கள் வரை சார்ஜ் ஆயுள் நீடிக்கும். குரலழைப்போடு 2 நாட்கள் வரை ஆயுள் சார்ஜ் நீடிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக