Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 பிப்ரவரி, 2021

அதிர்ச்சி தகவல்- பாதி இந்தியர்களிடம் குகை மனிதர்கள் டிஎன்ஏ: இயற்கையின் அதிசியம்: கொரோனாவை க்யூர் செய்யுது!

மனிதனின் சகோதர இனம்

ஜெர்மனி, ஐப்பானிய ஆராய்ச்சியாளர்கள் இந்தியமக்கள் தொகையில் பாதி பேர் நியண்டர்டால்களின் டிஎன்ஏவை பெற்றிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். இது கோவிட் தாக்கத்தை குறைக்கும் தன்மையை பெற்றுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனின் சகோதர இனம்

மனித இனம் தோற்றுவதற்கு முன்பாக வாழ்ந்த மனிதனின் சகோதர இனம் என்றும் வரலாற்று ஆய்வுகள் குகை மனிதர்கள் என்றும் அழைக்கப்படும் இனம்தான் நியாண்டர்தல். குரங்கில் இருந்து மனித இனம் தோன்றியதாக கூறப்படும் காலத்தில் வாழ்ந்து வந்த இனம் நியாண்டர்தல் எனவும் கூறப்படுகிறது.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை

பரவிவரும் கோவிட்-19 தாக்கத்தை முற்றிலும் நிறுத்த தடுப்பூசிகள் கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரபணு செலுத்துவதன் மூலமாகவும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தல்கள் மரபணுக்கள் நவீனக்கால மனிதனுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியாண்டர்தல் இனம்

மனிதனின் சகோதர இனம் என்று நியாண்டர்தல் அழைக்கப்பட்டாலும் ஹோமசெப்பியன்கள் என்றழைக்கப்படும் ஆதிமனிதர்களால் காலசூழ்நிலை காரணமாக நியாண்டர்தல் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நியாண்டர்தல் டிஎன்ஏக்கள் நவீனக்கால மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பது கண்டறியப்பட்டதோடு, நியாண்டர்தல்கள் டிஎன்ஏவில் தற்போது பரவும் கொரோனா தொற்று பாதிப்பை 22 சதவீதம் குறைக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பா, ஆசிய வாழ் மக்களிடம் சோதனை

நியாண்டர்தல்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஐரோப்பா, ஆசிய வாழ் மக்களிடம் சோதனை நடத்தப்பட்டது. ஜெர்மனியை சேர்ந்த பரிணாம மானுடவியல் ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மரபணுவில் கொரோனா பாதிப்பை குறைக்கும் திறன் இருப்பதை உறுதி செய்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பாதிபேர் நியாண்டர்தல் டிஎன்ஏ

பிஎன்ஏஎஸ்-ல் வெளியிடப்பட்ட ஆய்வு குறித்து ஆய்வாளர்களின் தகவலின்படி, இந்திய மக்கள் தொகையில் பாதிபேர் டிஎன்ஏ வரிசையை நியாண்டர்தல்களிம் இருந்து பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் ஒகினாவா அறிவியல் தொழில்நுட்ப பட்டதாரி பல்கலைக்கழகம், ஜெர்மனியில் உள்ள பரிணாம உயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தியது. 22 சதவீதம் வரை கோவிட்-19 பாதிப்பை குறைக்கும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஆசிரியரின் தகவல்

ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான ஹ்யூகோ செபெர்க் தி பிரிண்ட்டிடம் தெரிவித்த தகவலின்படி கிட்டத்தட்ட 50 சதவீத இந்தியர்கள் நியாண்டர்தல்கள் டிஎன்ஏ வரிசையை பெற்றுள்ளார்கள் என கூறப்பட்டது. இந்த மரபணு மாறுபாடு குஜராத்திகளில் 49.5 சதவீதமும், தெலுங்கர்களில் 48 சதவீதமும் பெற்று இருக்கிறார்கள் என கூறினார்.

நியாண்டர்தல்கள் மரபணுக்கள்

நியாண்டர்தல்கள் மரபணுக்கள் நவீன மனிதர்களின் உடலில் மீது உயிரியல் தாக்கத்தை கொண்டுள்ளன. காரணம் அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்துடன் தொடர்பிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக