Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

சமூக ஊடகங்களுக்கு விரைவில் கடிவாளம் போடப்படுமா.. உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!!!

சமூக ஊடகங்களுக்கு விரைவில் கடிவாளம் போடப்படுமா.. உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!!!

பொது நலன் மனுவில், சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், தீய நோக்கத்துடன்  போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை சட்ட வரையறையின் கொண்டு வருவதன் மூலம் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. 

இந்த மனு தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, மத்திய மற்றும் வேறு சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஊடகங்கள், சேனல்கள் மற்றும் நெட்வொர்க்குகள் மீதான புகார்கள் குறித்து தீர்ப்பளிக்க ஊடக தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரியை மனு  நிலுவையில் உள்ள நிலையில்,  இந்த மனுவை அதனுடன் இணைத்து விசாரிக்கப்பட்டது.

பொது நலன் மனுவில், சமூக ஊடகங்கள் (Social Media) மூலம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், தீய நோக்கத்துடன்  போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குறுகிய காலக்கெடுவுக்குள் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க உள்ளடக்கங்களை தானாக அகற்றும் ஒரு நெறிமுறையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு சிக்கலான உரிமை என்றும், பொறுப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பாக தகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என மனுவில் கோரப்பட்டுள்ளது

சமூக ஊடகங்களின் அணுகல் மிக அதிகமாக உள்ள நிலையில், அவை தவறாகப் பயன்படுத்தப்படும் போது, நாட்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் ஏற்படுகின்றன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஜனவரி 25 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மத்திய அரசு (Central government), இந்திய பத்திரிகை கவுன்சில் (PCI) மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (NBA) ஆகியோரிடமிருந்து பொது நலன் மனு தொடர்பாக பதில் கோரியது. இதில் ஊடகங்கள், சேனல்கள் மீதான புகார்களை விசாரிக்க ஊடக தீர்ப்பாயம்  அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஊடகங்கள், குறிப்பாக மின்னணு ஊடகங்கள், கட்டுப்பாடற்ற குதிரையைப் போல மாறிவிட்டன, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற (Supreme Court) நீதிபதி தலைமையிலான ஒரு சுயேச்சை  குழுவையும் ஊடக வணிக விதிகள் தொடர்பான முழு சட்ட கட்டமைப்பையும் ஆராய்ந்து வழிகாட்டுதல்களை பரிந்துரைக்க நீதிமன்றம் கோரியுள்ளது. தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், PCI மற்றும் NBA  தவிர, செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு (NBF) மற்றும் 'செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம்' (NBSA) ஆகியவற்றிற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக