எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பார்ப்போம்.
எல்ஜி கிராம் 360 லேப்டாப்
எல்ஜி கிராம் 360 லேப்டாப் ஆனது 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 16-இன்ச் டிஸ்பிளே என இரண்டு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பின்பு இந்த லேப்டாப் மாடல் சமீபத்திய இன்டெல் டைகர் லேக் சிபியுக்களால் இயக்கப்படுகிறது. குறிப்பாக விண்டோஸ் 10 ஹோம் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல் ஆனது 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5-1135 ஜி 7 சிபியு மற்றும் இன்டெல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப் மாடலில் 8GB of LPDDR4x ரேம் மற்றும் 256GB M.2 NVMe SSD வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அப்சிடியன் பிளாக் மற்றும் குவார்ட்ஸ் சில்வர் நிறத்தில் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடலில் இரண்டு 2 வாட் ஸ்பீக்கர் வசதி மற்றும் எச்டி ஆடியோ மற்றும் DTS:X Ultra வசதியும் உள்ளது. பின்பு backlit கீபோர்டு வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வைஃபை 6, கிகாபிட் ஈதர்நெட், ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.1 போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் வெப்கேம் மற்றும் கைரேகை ரீடர் போன்ற அம்சங்களும் இந்த லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக 14-இன்ச் எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல் 72Whr பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. பின்பு இதன் 16-இன்ச் மாடல் 80Whr பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் தூசி, அதிக வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை உள்ளிட்ட ஏழு சோதனைகளில் எல்ஜி கிராம் 360 தேர்ச்சி பெற்றதாகவும் எல்ஜி நிறுவனம் கூறுகிறது
சற்று உயர்வான விலை
இந்திய மதிப்பில்...
14-இன்ச் எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடலின் விலை ரூ.1.36 லட்சம்
16-இன்ச் எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடலின் விலை ரூ.1.45 லட்சம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக