கொரோனா தாக்கம் உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் பிரதான நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு ஆகும். அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடும் நிலை ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கின. அதேபோல் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தின. கொரோனா தாக்கம் பலரின் வாழ்க்கை முறையே மாற்றி அமைத்தது என கூறலாம்.
நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தும் ஆன்லைன் மீட்டிங்கில் எதிர்பாரா நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஆன்லைன் வீடியோகாலில் நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகள் சில சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி தற்போது வீடியோ காலில் நபர் ஒருவர் அலுவலக மீட்டிங்கில் இருக்கிறார். வீடியோ காலில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்த போது அவரது மனைவி அவருக்கு முத்தமிட முயற்சி செய்கிறார். அதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மனைவியிடம் கடிந்து கொள்கிறார்.
மனைவி எதுவும் பேசாமல் பின்னால் சென்ற சிரித்தப்படி நிற்கிறார். இந்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவரின் தனிப்பட்ட காரியங்கள் குறித்த வீடியோ பகிர்வது தவறு எனவும், அவரது மனைவி ஆடியோ கால் இணைப்பு இது என கருதியிருக்கலாம் எனவும் பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக